ஸ்ரீயாகிய நான் 1 வயசுக்குவந்துட்டோம்ல

தப்பா நினைக்காதீங்க. பசங்க எப்போ வயசுக்கு வராங்கனு தெரியமாட்டேங்குதே! ஆனா பசங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சா வயசுக்கு வந்தா மாதிரினு சொல்லுவாங்க. நான் வயசுக்கு வந்தது 12‍th படிக்கும் போது தான். கொஞ்சம் லேட் இல்ல? அப்போ கொஞ்சம் படிப்பாளி நான், இதெல்லாம் தெரியாது. எக்ஸ்கர்சன் அப்டின்ற பேருல வாத்தியாருங்க ஊரு சுத்த கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த வருசம் மெட்ராஸ் போலாம்னு சொன்னாங்க. கிளாஸ் கவனிக்காம சும்மா பின்னாடி பென்சுல பேசுரத கேட்டேன் அவனுங்க எனக்கு முன்னாடியே வயசுக்கு வந்துட்டானுங்க போல பீரை பத்தி பேசிகிட்டு இருந்தானுங்க. எனக்கு ஆசை வந்துடுச்சு சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமேனு அவனுங்க கிட்ட கெஞ்சுனேன். அவனுங்க சரி ஆனா நீ தான் வாங்கிட்டு வரணும்னு சொல்லிடானுங்க பாவிங்க. உடனே மாஸ்டர் பிளான் போட்டோம் நானும் என் பிரண்டு ஓணானும். அன்னிக்கு ராத்திரி தான் ஆபரேசன் பீர். அவன் வண்டி எடுத்துகிட்டு பாருக்கு போனோம். போகும் போது நான் தான் ஓட்டினேன் ஆனா எனக்கு வண்டி ஒட்ட தெரியாது ஏதோ ஒரு சந்தோசத்துல ஓட்டிட்டேன். அவன உள்ள அனுப்பி வாங்கிட்டு வர சொன்னேன் (உசாரு இல்ல நாங்கெல்லாம்). போனவன் அலறிகிட்டு ஓடி வரான் அவனோட அப்பா உள்ள இருக்காராம், ஆனா செல்லம் வாங்கிட்டு வந்துட்டான். சீக்கிரம் வண்டி எடுடானு சொல்றான் ஆனா வண்டி நவுற மாட்டேங்குது. அப்டியே வண்டிய தள்ளிகிட்டு எஸ் ஆயிட்டோம்.

அடுத்த பிரச்சனை எங்க வெக்கறதுனு. அடுத்த நாள் 4 மணிக்கு தான் போறோம் சரி அத அவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பொதருல போட்டுட்டு போயிட்டோம். நான் வீட்டுக்கு நல்ல புள்ளயா போய் மத்த விசயம் எல்லாம் எடுத்து வெச்சேன். ஒரு 7up பாட்டில் எடுத்து போட்டுகிட்டேன் (அதுல ஊத்துனா தான் தெரியாதுனு ஐடியா. எப்டி யோசிச்சேன் பாத்தீங்களா?). சந்தோசமா தூங்க போயிட்டேன். அடுத்த நாள் 3.30 மணிக்கு அவன் வீட்டுக்கு போனா அந்த இருட்டுல எந்த பொதருல போட்டோம்னு ஞாபகம் இல்ல. டார்ச் அடிச்சி எப்டியோ 10 நிமிஷதுல கண்டு புடிச்சிட்டோம். அதுக்கு அப்புறம் தான் தெரியுது அது சோடா பாட்டில்ல இருக்குற மூடி மாதிரி இருக்கு. ஓப்பனர் இல்ல, பல்லால கடிச்சாலும் வேலக்கு ஆகல. அடுத்த ஐடியா நர்ஸ் ஊசி எல்லாம் ஒடச்சி ஒப்பன் பண்றா மாதிரி தொரக்கலாம்னு தோணுச்சு (இட் ஹேப்பன்ஸ்! எல்லா நேரமுமா நல்ல ஐடியா வரும்?). ஆனா அது சொதப்பல்னு கல்லால அடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது. எல்லா பீரும் என் சட்ட மேல தான். பாதி பாட்டில் காலி மீதிய 7up பாட்டில்ல ஊத்தினோம். ஸ்கூல் யுனிபாம்ல தான் போணும் ஆனா சட்ட எல்லாம் நாசம் ஆச்சு அப்டியே அவன் வீட்டுக்கு பின்னாடி போய் இருட்டுல அத தோச்சு மாட்டிக்கிட்டு போனேன்.

ஆனா அந்த வாசனை (நாத்தம் தான் ஆனா இப்போ அது வாசனையா தெரியுது) அப்டியே தான் இருந்தது. எல்லாம் வித்தியாசமா பாத்தானுங்க. ஓடி போய் கடைசி சீட்ட போட்டு சைலண்ட் ஆயிட்டேன். அப்புறம் சட்டய கழட்டி தூக்கி போட்டுட்டேன். அத காசு குடுத்து வாங்கிட்டோமேனு குடிச்சுட்டேன். நம்ம சிம்ஸ் சூப்பரா ஆடியிருக்குமே நிலவை கொண்டு வானு ஒரு வாலி பாட்டு அத போட்டு சரியான குத்து போட்டேன். அப்பால போய் பிளாட் ஆயிட்டேன். வாய முதலை மாதிரி தொரந்துகிட்டு தூங்கி இருக்கேன். அத போட்டோ வேற எடுத்து மானத்த வாங்கிட்டானுங்க. ஆனா நான் கவலை படலைங்க (இருந்தா தான;)). அன்னிக்கு இருந்து நானும் சொல்லிக்கிறா மாதிரி வளந்துட்டேன் ஸ்கூல்ல. 12th முன்னாடி நடந்த கத நிறைய இருக்கு (வித்து ரொமான்சு) . அப்புறம் சொல்றேன். ரொம்ப யோசிக்காதிங்க ரொமான்சுனு சொன்ன உடனே... ;)

ஸ்ரீயாகிய நான் 2

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

6 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

தாங்கள் வயதுக்கு வந்ததுக்கு என் வாழ்த்துக்கள்... ஆனால் 12ம் வகுப்பின் போது...ம்ம்ம்ம்ம்...கொஞ்சம் நெருடத்தான் செய்கின்றது....எனை திட்டாதீர்கள்... நான் கல்லூரியின் போது வயதுக்கு வந்தேன்... !

"வயதுக்கு வருவதுதானே உலக நியதி....அது எப்போதென்றால் என்ன்?" - வேதாளத்தார் என் காதில் உரைத்தது!

ஸ்ரீ said...

என்ன செய்ய? நான் சற்று ஆர்வக்கோளாறு. அதனால் தானோ என் தொல்லை தாங்காமல் பேச ஆரம்பித்த உடனே ஸ்கூல்ல சேத்துட்டாங்க. கொஞ்சம் அட்வான்ஸ் பிரைன் :)

பிரேம்குமார் said...

ஹி ஹி ஹி.. ந‌ல்ல இருந்துச்சுப்பா உங்க‌ சுற்றுலா மேட்ட‌ரு.
;)

ஸ்ரீ said...

நன்றி பிரதர்,
இன்னும் நிறைய இருக்கு பிரதர் ஆனா நம்ம மரியாதைன்னு ஒன்னு இருக்கு இல்ல அதான் எல்லாம் சென்சார் பண்ணியாச்சு. :)

Anonymous said...

nanraagathaan irundhathu...meendum thodarum endru ninaikiren...!

ஸ்ரீ said...

வாங்க அனானி,
இதை நீங்க உங்க பேர்லயே சொல்லி இருக்கலாமே!!! கண்டிப்பா எழுதுறேன் கொஞ்சம் வேலை இப்போ அதான் எழுத முடியலை. இதே மாதிரி இன்னும் நிறைய மேட்டர் இருக்கு :)