ஒற்றை அன்றில் - வேர்ட்பிரஸ் மாற்றம்

ஒரு வழியா கடைசியா புது தளம் தொடங்கியாச்சுங்க.

தள முகவரி - http://ottraiandril.com

புகழனுக்கு என் நன்றிகள். போன பதிவில் அவர் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால், இது என்னும் பல நாட்கள் எடுத்திருக்கும். ஏதோ ஒரு சின்ன சோம்பேறித்தனம் இருந்தது. அதை கொஞ்சம் விரட்டிவிட்டு போன வார இறுதியில் எல்லா வேலைகளையும் முடிச்சிட்டேன்.

அருட்பெங்கோவின் இந்த பதிவு ரொம்ப உதவியா இருந்தது. அவர் முன்னமே சொன்னதால தலைப்புகளில் இருந்த சிறப்பு குறிகள் நீக்கிவிட்டு தான் மாற்றம் செய்தேன். எல்லா பதிவும் இதற்கு மாறிவிட்டது மகிழ்ச்சி தான் ஆனால் 10 பின்னூட்டங்கள் காணவில்லை :).

வேர்ட்பிரஸ் நிறுவிய பின்னர் தளத்தில் தமிழில் இருந்த வார்த்தைகள் வெறும் கேள்விக்குறிகளாக தெரிந்தன. சரி தான். இந்த தளமே ஒரு கேள்விக்குறி ஆகிவிடுமோ என எண்ணி கோவுக்கு தொலைபேசி செய்தேன். அவர் Database Table-களில் உபயோகித்த Collation என்கிற பகுதியை Latin-ல் இருந்து UTF8 Unicode ஆக மாற்ற சொன்னார். அதற்கு பின் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மாற்றம் முடிந்தது.

அப்பாடா கவுஜை போடலடான்னு சந்தோஷ படுறீங்களா? புது தளத்தில் போட்டிருக்கேன் :)

Over to ottraiandril.com

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

கள்ளூறியவள்
என் கல்லூரியில்
புதிதாய் சேர்ந்த
‘கள்ளூறி’யவள்
நீ!

#

நீ
கல்லூரிக்கு வராத நாட்கள்
விடுமுறை தினங்கள்
காதலுக்கு.

#

நீயே கல்லூரியாய்ப் போக,
கழுத்தோர மச்சம் கரும்பலகையாக,
எப்போது தொடங்கப் போகிறாய்
காதல் பாடத்தை?

#

‘குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.

#

வேடிக்கையும், விளையாட்டும்
நிறைந்த கல்லூரி வாழ்க்கையில்
உன் வேடிக்கையால்
என் மனதோடு விளையாடினாயே!
நினைவிருக்கா?

#

ஆளில்லாத வகுப்பில்
என் பிறந்த நாளுக்கு
நீ முத்தம் தர
வெட்கத்தில்
சிவந்த கரும்பலகைக்கு
இந்நேரம்
வர்ணம் தீட்டியிருப்பார்களா?

#

டேய் தம்பி நீயும் புது வலை தொடங்குறதா போன பதிவுல இருந்து சொல்லிக்கிட்டு வர ஆனா ஒன்னுமே பண்ணாம இருக்க அப்டின்னு கேக்குறீங்க. புரியுது. நம்ம கையில என்னங்க இருக்கு எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பாத்துக்குவான் :). என்னங்க பண்ண? கிழமையும் ஞாபகத்துல இருக்கறது இல்லை. புதன் கிழமை ஆச்சே ஏதாவது பதிவு இருக்கான்னு யாராவது கேட்டா தான் கவுஜை எழுத கலப்பையை தேடுறேன் (எப்போ நீ கவுஜை எழுதுனன்னு கேட்டீங்கன்னா மேல இருக்கறது எல்லாம் சத்தியமா கவுஜை தானுங்க). ஏன்னா நாங்க அவ்ளோ பிசி (நம்புங்கோ நம்புங்கோ).

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

தூணிலும் காதல் துரும்பிலும் காதல்
காதல்
விஷ மாத்திரையா?
விஷம மாத்திரையா?

*

பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.

*

நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.

*

சிறுவயது புகைப்படத்தில்
தூணுக்கு பின் நீ,
உனக்கு நாவல் பழம் எடுத்து வந்த
துருவேறிய என் வடிவியல் பெட்டி*,
பார்
காதலும்
தூணிலும் இருக்கும்,
துரும்பிலும் இருக்கும்.

*

புது மழையில்
கைகள் விரித்தபடி
கண்கள் மூடி
மகிழ்ந்தாயே!
அன்று தான்
சிலுவையில் அறைந்த
இயேசு சிரித்துப்பார்த்தேன்.


*வடிவியல் பெட்டி - Geometry Box.

(புது கூடு கட்டிக்கிட்டு இருக்கேன். இது தான் இந்த தளத்தில் கடைசி பதிவாய் இருக்கும் என நினைக்கிறேன். எல்லா புதன்கிழமையும் பதிவு போட்டு வந்ததால் இந்த வாரம் விடுபட்டுவிடக்கூடாதென கைக்கு வந்த கவுஜைகளை கிறுக்கி இருக்கேன். பொறுத்தருளவும் :). புது கூட்டில் சந்திப்போம்.)

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.