ஒரு காதல் தேவதை

இந்த மாதம் காதல் மாதமாகத் தான் பார்க்கப்படுகின்றது. நானும் வேலண்டைன் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று தான் இருந்தேன். அதை யாராவது என்னை விட சிறப்பாக செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் கைவிட்டு வேறு ஏதாவது எழுதலாம் என யோசித்த நேரம் தான் வரலாற்றில் இருந்து ஒரு காதல் ஜோடியைப் பற்றிய தகவல் தந்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. வழக்கம் போல லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் என தான் யோசித்தேன்.

ஆனால் காதலுக்கும் வேறு ஒரு பரிமாணம் இருக்கின்றது! அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த காதலர்கள் வரிசையில் முதலில் வருவது ஹிட்லர் - ஈவா ப்ரான். காதலா? ஹிட்லரா? அவருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஹிட்லரின் காதல் என்னை கவர்ந்ததற்கு காரணம் ஹிட்லர் அல்ல ஈவா.

hitler

20 ஏப்ரல் 1889 பிறந்த ஹிட்லரும் ஒரு சாதாரண மனிதனாகத் தான் இருந்தார். தோல்விகள் தவிர வேறு ஒன்றும் அறியாமலே வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடிக்கவில்லலை, சிறு வயதிலே பெற்றோர்களின் இழப்பு, நண்பர்கள் இல்லை, வேலையில்லாமல் வியன்னா நகரத்தில் சுற்றித்திரிந்திருக்கிறார். ஓவியன் ஆக ஆசைப்பட்டவர் ஹிட்லர். இதை குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், ஓவியம் தான் என்னை பொருத்தவரை மென்மையான கலை. அப்படி ஒரு கலை உணர்வு இருந்த ஒருவர் பின்னர் சர்வாதிகாரியாக மாறியது வேறு ஒரு கதை. அவர் வாழ்ந்த 56 ஆண்டுகளில் முதல் 30 வருடம் அவர் வெறும் தோல்வியின் மறு உருவாகத்தான் இருந்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் ராணுவ வீரனாக (வகித்த பதவி "ரன்னர்" - டாம் ஹாங்க்ஸ் நடித்த "ஃபாரஸ்ட் கம்ப்" படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும், அது வீரர்களுக்கு தகவல்கள் மற்றும் கட்டளைகள் எடுத்து சென்று சேர்க்கும் ஒரு பணி) சேர்ந்தார். பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து 1933ல் 'சான்ஸ்லர்' பதவியை அடைந்தார். அடுத்த மூன்று வருடங்களில் 60 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தந்தார். அந்த காலத்தில் தான் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டு பின்னர் அது உலகப்புகழ் "வோக்ஸ்வேகன்" ஆனது. அவர் ஆட்சியில் தொழிற்சாலைகள் எல்லா சரியாக நடந்தது காரணம் முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு அறியாதவர் ஹிட்லர். யார் செய்தாலும் தவறு தவறு தான். அந்த காலத்தில் ஜெர்மனியின் கடவுளாக பார்க்கப்பட்ட ஹிட்லர் பின்னர் சாத்தானாக மாறியது சோகமே.

hitler_fuhrer

அவரின் காதல் கடைசி காலத்தில் தான் தோன்றியது. ஒருவேளை அது கொஞ்சம் முன்னமே தோன்றி இருந்தால் ஜெர்மனிக்கும் ஒரு லிங்கன் கிடைத்திருக்கக்கூடும். முன்பு ஒரு சமயம் ஜெலி ராபால் என்ற தன் சகோதரியின் மகள் மீது அவர் ஆர்வம் காட்டி இருக்கிறார். ஆனால் பின்பு ஈவா ப்ரான் உடன் அவர் நெருங்கிப்பழக ராபாலிடம் இருந்து விலக ஆரம்பித்தார். ஈவாவிடம் இருந்து ஹிட்லருக்கு வந்த கடிதம் ஒன்றை படித்த ராபாலி தற்கொலை செய்து கொண்டார் (செப்டெம்பர் 1931).

1945 ஏப்ரல் 22 பெர்லின் மீது பிரிட்டிஷ் விமானங்கள் குண்டு மழை பொழிய தன் சாம்ராஜ்யம் சரியத்தொடங்கியதை பார்த்த படி இருந்தார் ஹிட்லர். அப்போது ஈவா-வை தப்பித்து போகும் படி பணித்தார் அவர். ஈவா அவர் கைகளை பிடித்துக்கொண்ட்டு "கடைசி வரை உங்களோடு தான் இருப்பேன்" என கூற எல்லோர் முன்னிலையிலும் அவர் உதட்டில் முத்தமிட்டார் ஹிட்லர். அந்த தருணத்தில் தான் ஈவா-வை மணப்பதாக முடிவெடுத்தார் ஹிட்லர். திருமண சான்றிதழில் முதலில் "Eva.B" என கையெழுத்திட்ட ஈவா ப்ரான் பின்னர் அதை அடித்துவிட்டு "Eva Hitler" என கையெழுத்திட்டார். இது நடந்தது 28 ஏப்ரல் 1945 இரவு 11:55.eva%20braun%20con%20hitlerஏப்ரல் 30 மதியம் 3:30 முதலில் சைனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார் ஈவா. பின்னர் தன் கைத்துப்பாக்கியால் வலது நெற்றி பொட்டில் சுட்டுக்கொண்டார் ஹிட்லர். தன் உடல் கூட எதிரியின் கைகளில் சிக்கக்கூடாது என ஹிட்லர் கேட்டுக்கொள்ள அவர் உடன் இருந்தோர் இருவரின் உடலை எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். தொடர்ந்து 3 மணி நேரம் எரிந்தது காதல்.


இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றலாம் ஆனால் ஈவாவின் காதல் சற்றே சிந்திக்க வைக்கிறது. அந்த காலத்தில் பாதுகாப்புக்காக எத்தனையோ பெண்கள் தனக்கு பிடிக்காதவர்களோடு இருந்திருக்கிறார்கள். ஆனால் ஈவா, ஹிட்லர் போக சொல்லியும் போகாமல் அவரோடு இறந்து போனாள். சரித்திரம் ஈவாவை "girl in a gilded cage" என தான் அழைக்கிறது. ஹிட்லரோடு அவர் இருந்த வரை ஹிட்லரின் புகைப்படத்தோடு ஏதோ ஒரு படிக்கட்டின் கீழ் அவருக்காக காத்திருப்பதே அவர் வேலையாக கொண்டிருந்தார். 1912 பிப்ரவரி 6 பிறந்த ஈவா ஹிட்லரை சந்தித்தது தன் 17 வயதில். முனிச் நகரில் ஈவா வேலை பார்த்த கடைக்கு ஹிட்லர் 1929 ஆம் ஆண்டு வந்த போது நிகழ்ந்த நிகழ்வு அது. தனது நண்பர்களுக்கு ஹிட்லரை பற்றி ஈவா சொன்னவை, "gentleman of a certain age with a funny moustache, a light-colored English overcoat, and carrying a big felt hat." (தமிழாக்கம் செய்தால் அர்த்தம் மாறக்கூடும் என எண்ணி மாற்றவில்லை).

1931 ஹிட்லருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், "Dear Mr. Hitler, I would like to thank you for the pleasant evening at the theater. It was unforgettable. I shall always be grateful for your friendship. I count the hours until the moment when we shall meet again ..."

evabraunbyhitler

ஹிட்லர் வரைந்த ஈவாவின் படம்.
காதலோடு வாழ்ந்து அது கிடைக்காமல் போனாலும் தன் கடைசி 2 நாட்களில் அதன் அழகை உணர்த்தி இன்னும் பலருக்கு தெரியாமல் மறைந்த ஈவா தான் என்னை பொருத்தவரை சரித்திரத்தின் அழகான காதலி. காதல் தவிர அவர் எதிர்பார்த்தது ஒன்றும் இல்லை ஆனால் அவர் எதிர்பார்த்த அது ஒன்று தான் அவருக்கு கிடைக்காமல் போனது. இன்று ஈவாவின் பிறந்தநாள். இந்த பதிவு ஈவாவுக்காக.


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

மங்களகரமா ஒரு மொக்கை

இந்த வார நட்சத்திர பதிவர் மாப்பி அருட்பெருங்கோ மொக்கை போட கூப்பிட்டு இருக்கார். கூப்பிட்டதுக்கு நன்றி மக்கா. எவ்ளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா? அப்டினு நெனச்சு தான் எழுத வந்தேன் ஆனா எழுத தலைப்பு கிட‌க்கலை. மூளைய சொறிஞ்சதுக்கு அப்புறம், நம்ம ரேஞ்சுக்கு ஒரு லேஞ்சுவேச்சுல மொக்கை போட்டா பத்தாது பல பாஷைல மொக்கையை போட்டு விரிவு படுத்துடா அப்டினு வழக்கம் போல நம்ம அயின்ஸ்டீன் ஐடியா குடுத்தார். சரி நமக்கு தான் ஜெர்மன், பிரென்சு, இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஸ், ஜாப்ப‌னீஸ், ம‌லாய், சிங்க‌ள‌ம், ர‌ஷிய‌ன், கொரிய‌ன், விய‌ட்நாமீஸ், போலீஸ்(Polish), இஜிப்டியன் இப்டி தெரிஞ்ச பல பாஷைல ஏதாவது ஒன்னுல எழுதலாம்னு தான் இருந்தேன் ஆனா அதெல்லாம் படிக்கிற உங்களுக்கு தெரியாதுங்குற ஒரே காரணத்துக்காக அதெல்லாம் எழுதாம கை விட்டுட்டேன். மொக்கை தானே தோ கீழ போட்டிருக்கேன் பாருங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

mokkai


ஆ... இத்தனை மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :D மெய்யாலுமே மொக்கை போடுறது கஷ்டமுடா சாமி. அதென்னடா மங்களகரமான மொக்கைன்னு கேக்குறீங்களா? மஞ்சா கலர்னா மங்களகரம் தான (நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு).

பி.கு: அம்மா சாமி ஜாவா லேங்குவேஜ் கூட ஒழுங்கா தெரியாதுயா. "Which language are you good in?" வேலைக்கு சேந்த அப்போ டீம் லீட் கேக்க "தமிழ்"னு பளிச்சுன்னு பதில் சொல்லி அன்னிக்கே மொக்கை வாங்கின காயம் இன்னும் ஆறலை. உண்மைய சொல்லணும்னா தமிழே கொஞ்சம் வீக் தான்.

நான் அழைக்கும் மூவர்:

1. காவியன்.
2. ரதீஷ்.
3. உதய்.

-ஸ்ரீ.

ஸ்ரீயாகிய நான் 4 ஆஹா இவன் அவன் இல்லை

ஸ்ரீயாகிய நான் 1

ரொம்ப நாள் கழிச்சு சொந்த கதை எழுதலாம்னு உக்காந்தா ஒன்னுமே தோணமாட்டேங்குது. என்னடா இது இருக்குற எல்லா டுபாக்கூர் வேலையும் பண்ணோமே ஆனா எதுவுமே நினைவுக்கு வரலையே அப்டின்னு ஒரே பீலிங்ஸா போச்சு. ஆஃபீஸ்ல மானாவாரியா வேலை செஞ்சி எல்லாம் மறந்து போச்சுப்பான்னு நானே ஒரு பொய்ய சொல்லி என்னையே சமாதானப்படுத்திக்கிட்டு இருந்த நேரம் தான் இந்த விஷயம் ஸ்ரைக் ஆச்சு.

ஏற்கனவே சொன்னா மாதிரி நான் ஒரு சூப்பரான ஸ்கூல்ல சுமாரா படிச்சிக்கிட்டு (நம்பித்தான் ஆகணும் வேற வழி இல்லை ஏன்னா கதை சொல்றது நானு) இருந்தேன். அங்க எல்லாத்தையும் படிச்சி கிழிச்சிட்டு காலேஜை பாக்க போயிட்டேன். அம்மா அடிக்கடி ஒன்னு சொல்லுவாங்க "டேய் புது தொடப்பம் நல்லாத் தான் பெருக்கும்"னு. அது என்னன்னா முதல்ல ஏதாவது ஆரம்பிக்கும் போது நல்லா இருக்கும் ஆனா போக போக எல்லா ஆர்வமும் போயிடும்னு அர்த்தம். அதே மாதிரி தான் காலேஜ் சேர்ந்த உடனே ஆர்வக்கோளாறுல ஏதோ படிச்சு கிளாச்ல 2வது மார்க் வாங்கிட்டேன் செமஸ்டர்ல (அட இது உண்மை உண்மை உண்மை). அங்க தான் ஆரம்பிச்சது பிரச்சனையே. அப்போ எவனும் எதுவும் கண்டுக்கலை, 2வது செமஸ்டர் பிராக்டிக்கல்ஸ்-ல 'வைவா'க்கு போனேங்க. நாம தான் தருமியாச்சே கேக்கதான் தெரியும் அதுல பதில் சொல்லணுமாம். பசங்க எந்த கேள்வி கேட்டாலும் 'நோ ஐடியா'னு சொல்ல சொன்னாங்க. நானும் சரி 'நோ ஐடியா' அப்டின்னு அதை மட்டும் மனப்பாடம் செஞ்சிட்டு போனேன்.

அன்னிக்கு வந்திருந்த வாத்திக்கும் எனக்கும் எப்பவுமே மாமன் மச்சான் விளையாட்டு தான் நடக்கும். ஏன்னா அவர் என்னை விட படிப்புல கொஞ்சம் வீக்கு :). "Carpentry" அப்டின்னு ஒரு பிராக்டிக்கல் எக்ஸாம். அட அது அழகா இருக்குற கட்டையை நோண்டி ஓட்டை போட்டு கேவலமாக்குற ஒரு வெளாட்டு (பண்ண தெரியாது இப்படி தான் சொல்லணும், ஏன்னா நான் அதை தான் பண்ணுவேன்). நீங்களே சொல்லுங்க இந்த ஓட்டை போடுற கருமத்துக்கு எதுக்குங்க வைவா? ஒரு வழியா குடுத்த கட்டைய சிம்ரன் மாதிரி ஒரு ஷேப்புல செதுக்கினேன். ஆனா நான் பண்ணதுக்கும் அவங்க பண்ண சொன்னதுக்கும் சம்மந்தமே இல்லை அது வேற விஷயம் :) (நமக்கு சிம்ரன் தான முக்கியம்). அதை எடுத்துக்கிட்டு நெஞ்ச நிமுத்திக்கிட்டு போனேன் வைவாக்கு. மன்னன் படத்துல கவுண்டமணி கேப்பாரே "இந்த ஓட்டை கண்ணாடிய போட்டுக்கிட்டு கூட்டத்து முன்னாடி நிக்குறியே உனக்கு இருந்தாலும் ரொம்ப தான் பா தைரியம்" அதே மாதிரி கூட இருந்தவன் எல்லாம் கிண்டல் பண்ணாலும் ஆனது ஆகட்டும்னு போனேன். அங்க போய் பாத்தாதான் தெரியுது நம்ம மாமு இருக்குற விஷயமே. வயித்துல லைட்டா புளிய கரைச்சா மாதிரி இருந்தாலும் அதெல்லாம் காட்டிக்காம கொண்டு போன சிம்ரனை அவரு கையில குடுத்தேன். அதை சிரிச்சிக்கிட்டே வாங்கி மத்தவங்க பண்ணது கூட வைக்கும் போது தான் தெரிஞ்சிது அந்த கூட்டத்துலயே என்னோடது மட்டும் சொறி நாய் மாதிரி தனியா தெரிஞ்சது :(.

மாமு அதுக்கு அப்புறம் பேச ஆரம்பிச்சவர் (எதுக்கும் அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்டினே போடுவோம் எதுக்கு வம்பு?) தான். டிசைன் டிசைன் னா அசிங்கப்படுத்துனார் நான் பண்ண சிம்ரனை. நாம தான் கொட்டுற மழைல கொய்யா தின்னுறவங்களாச்சே. "மாமு நீ என்ன தான் சொல்றியோ சொல்லிக்கோ"ன்னு சிரிச்சிக்கிட்டே இருந்தேன் (வெளியில தான் சிரிச்சேன் ஆனா உள்ளுக்குள்ள.....). அவர் செம வெறி ஆயிட்டார் இரு டா வைவா கேக்குறேன்னு சொல்லிட்டு , "நீ தான் 2nd மார்க்காமே போன செம்ல, எதுல அதிகமா மார்க் வாங்குன"ன்னு ஆரம்பிச்சார். நான் தான் வெகுளியாச்சே, "எலக்ட்ரிக்கல்ஸ் சார்"னு சொன்னேன். பசங்க சொல்லி குடுத்த 'நோ ஐடியா'னே சொல்லி இருக்கலாம். அதை கேட்ட உடனே என்னா சந்தோசம் மாமு மூஞ்சில 'மாட்டுனான் டா' ன்னு நெனச்சார் போல.

மொதல் கேள்வியா "வீட்டுல என்ன யூஸ் பண்றோம் ஏ.சியா? டி.சியா? (Alternate.Current or Direct.Current)"னு கேட்டார். அதை நான் சுத்தமா எதிர்பாக்கலை ஏன்னா அவரு ஒரு மெக்கானிக் (அதாங்க மெக்கானிக்கல் இஞ்சி). நான் சுதாரிச்சிக்கிட்டு "மாமு உனக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்குன்னு" மனசுக்குள்ளயே நினைச்சுக்கிட்டு கொஞ்சம் திங்கிங் பண்ணேன். ஏ.சினா பல்பு ஆஃப் ஆகி ஆன் ஆகும், டி.சினா தான் தொடர்ந்து எரியும்னு உள்ளுக்குள்ள இருந்த அயின்ஸ்டீன் மையில்டு வாய்ஸ்ல க்ளூ குடுத்தார். அப்புறம் தட்டுத்தடு மாறி "டி.சி" அப்டின்னு அழகா தப்பா சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் நான் என்னத்த சொல்ல? கலர் கலரா கலாய்ச்சார். கொஞ்சம் கேப்பு விட்டு மறுபடியும் "மிக்ஸி எப்படி வேலை செய்யுது?"ன்னு ரெண்டாவது கேள்வியை கேட்டு தொலைச்சுட்டாரு. நான் அட இது ஈசிடா மச்சின்னு நினைச்சிக்கிட்டு, "சார் பிளக் போட்டு சுச்ச போட்டா மோட்டர் சுத்தும் சார் அப்டியே சட்னி அரைச்சிடும் சார்"னு கொஞ்சம் அப்பாவியா சொல்லிட்டேன். அது வரைக்கும் சிரிச்சிக்கிட்டு இருந்தவர் என்னை கடிக்காத குறையா பாத்தார் அதுக்கு அப்புறம் தான் "மாப்பிளை இது கூட தப்பு போல டா உசாரு!!!"ன்னு உள்ள இருந்த பட்சி சொல்லுச்சு. "சார் நான் உங்களை கேட்டதே அந்த மோட்டர் எப்படி சுத்தும்னு தான்" இப்படி ஒரு ரிப்ளை வர. "இனிமே எல்லாத்தையும் மூடிக்கிட்டு அமைதியாவே இருடா"ன்னு மறுபடி பட்சி கத்துச்சு. அதுக்கு அப்புறம் வாயே தொறக்கலை. ஆத்து ஆத்துன்னு ஆத்துனார் சொற்பொழிவை, சிரிச்சிக்கிட்டே எல்லாத்தையும் கேட்டுட்டு வெளியில கிளம்புர நேரம் பாத்து "அடுத்த வருஷம் வந்து மறுபடி எழுது செல்லம்"னு சொல்லி அனுப்பிட்டார்.

ரூமுக்கு வந்து டிப்ளமா பையன் கிட்ட தான் வீட்டுல ஏ.சி யூஸ் பண்றோம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அவன் தான் 50Hz சப்ளை அப்டின்னா ஒரு எல்.இ.டி(LED) ஒரு நொடிக்கு 50 முறை ஆஃப் ஆகி ஆன் ஆகும்னு சொன்னான் (கொஞ்சம் இன்சினியர் எல்லாரும் நெஞ்சுல கைய வெச்சு சொல்லுங்க இந்த மேட்டர் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?, இப்போ 60Hz யூஸ் பண்றாங்க வெளிநாட்டில்). "மச்சி அது தெரியும் டா சும்மா நம்ம மாமு கூட வெளாடி ரொம்ப நாள் ஆச்சு இல்லை அதான்". இந்த பொய்ய சொல்லித்தான் 2வது வருஷம் முழுசா ஓட்டுனேன். அடுத்தவன் அசிங்கப்பட்டா நம்ம பசங்க ரொம்ப நாளைக்கு நியாபகத்துல வெச்சிருக்கானுங்கய்யா. இதை அவனுங்க மறக்க இதே மாதிரி நிறைய விஷயம் பண்ண வேண்டியதா போச்சுங்க. அதெல்லாம் அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு இந்த மொக்கை போதும்னு நினைக்குறேன். :)

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

காதல் பால்

1

விளக்கம்: தீக்காயம் கூட ஆறிவிடும் ஆனால் காதலியின் முத்த வடுக்கள் ஆறாது. அந்த வடுக்களே காதலின் சின்னம்.

2

விளக்கம்: மழையை எதிர்நோக்கியே இந்த உலகம் வாழ்வது போல் என்னவளின் கண்ணை நோக்கியே வாழ்ந்து பழகிவிட்டேன்.

3

விளக்கம்: மயிர் நீங்கிவிடின் வீழ்ந்து மடியும் கவரிமான் போல உண்மைக் காதலர்கள் உயிர் நீப்பர் காதலுக்காக.

4

விளக்கம்: எப்படி இந்த உலகம் காதல் இன்றி அமையாதோ அதே போல் அவள் இல்லாமல் என் உலகமும் அமையாது.

5

விளக்கம்: காதலோடு பிறப்பதே நன்று அப்படி இல்லாதார் பிறக்காமல் இருப்பதே மேல்.

6

விளக்கம்: காதல் செய்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

7

விளக்கம்: நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் காதல் வேண்டும்.

8

விளக்கம்: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து கட்டியணைக்க காதல் பெருகிக் கொண்டே இருக்கும்.

9

விளக்கம்: காதலித்தே சிலர் வாழவேண்டும் என்று கடவுள் முடிவு செய்து இருந்தால், அக்கடவுளும் காதலனைப் போல் அலைந்து திரிந்து வருந்த வேண்டும்.


10

விளக்கம்: மந்திர ஜாலம் செய்து நெருப்பின் நடுவில் ஒருவன் தைரியமாய்ப் படுத்துறங்கலாம்; காதல் வந்தபோது கண்மூடி ஒருவனால் உறங்க முடியாது.


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.