காதல் தான் வேறென்ன

நீ முன் நின்றால்
நிலைக்கண்ணாடிக்கே
நிலை கொள்வதில்லை.
என் நிலை சொல்லவேண்டுமா?

Photobucket

எனக்குள் காதல் நுழைகையில்
குருதிவெள்ளணுக்கள் எதிர்க்காமல்
சிவப்பணுக்களாலான
பூங்கொத்தோடு வரவேற்றதே!
உனக்கும் அப்படித்தானே?

Photobucket

பல்லியின் காலடியிலும்
வசதியாய் வாழ்வேன்
உன் காதல் துணையிருந்தால்.

Photobucket

போன வாரம்
எனக்களித்த பூச்செண்டை
முத்தமிட்டாயா?
வாடியபின்னும்
வாசம் வீசுகின்றது!

Photobucket

எப்போது பார்த்தாலும்
என் முகத்தில் நீயும்,
உன் முகத்தில் நானும் தான் தெரிகின்றோம்.
ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடிகள் போல.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

22 கால்தடங்கள்:

தமிழ் said...

/நீ முன் நின்றால்
நிலைக்கண்ணாடிக்கே
நிலை கொள்வதில்லை.
என் நிலை சொல்லவேண்டுமா? /

wowwwwwwwwwwwww

Anonymous said...

/போன வாரம்
எனக்களித்த பூச்செண்டை
முத்தமிட்டாயா?
வாடியபின்னும்
வாசம் வீசுகின்றது!/

இது ரொம்ப நல்லாருக்கு

/உனக்குள் தொலைய வேண்டாம்.
அழிந்துவிடுகிறேன்,
தொலைந்தால் என்றாவது கிடைத்துவிடுவேனாம்.
பயப்படுகிறது மனம்…/

அழிஞ்சு போயிட்டா அப்பறம் எப்படி காதலிக்கறது?

Sri said...

:-) romba romba arumaiya irukku Sri kavithai ellame.....!!

//பல்லியின் காலடியிலும்
வசதியாய் வாழ்வேன்
உன் காதல் துணையிருந்தால்.//

yeppadi ippadi ellam...?!? :-)

super...!! :-)

கோபிநாத் said...

\போன வாரம்
எனக்களித்த பூச்செண்டை
முத்தமிட்டாயா?
வாடியபின்னும்
வாசம் வீசுகின்றது!
\\

சூப்பர் ;))

சென்ஷி said...

சின்ன சின்ன கவிதைகள் எப்பவும் ரசிக்க முடியும்ங்கறதுக்கு உங்க எளிமையான வரிகள் உதாரணம்.. அதிலும் அந்த ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடி உவமை மிகவும் பிடித்திருக்கிறது :))

சென்ஷி said...

//ஒற்றை அன்றில்//

SUPER TITLE :))

Anonymous said...

முத்தமிட்டாயா?
வாடியபின்னும்
வாசம் வீசுகின்றது

Vaasam...imm..narttam thaan adikkum
kaadhal vayapadathirunthal..
அதிலும் அந்த ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடி உவமை மிகவும் பிடித்திருக்கிறது -OK

ஸ்ரீ said...

// திகழ்மிளிர் said...

wowwwwwwwwwwwww //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். நன்றி தமிழ் ;)

ஸ்ரீ said...

//arutperungo said...

இது ரொம்ப நல்லாருக்கு //

வா முரசு. அப்படியா நன்றி ஹை.

//அழிஞ்சு போயிட்டா அப்பறம் எப்படி காதலிக்கறது?//

நீங்களே சொன்ன அப்புறம் அது எதுக்கு? நீக்கியாச்சு ;)

ஸ்ரீ said...

//Sri said...
:-) romba romba arumaiya irukku Sri kavithai ellame.....!!//

ரொம்ப நன்றி ஸ்ரீ.

//yeppadi ippadi ellam...?!? :-)
super...!! :-) //

தெரியாம தோணிடுச்சு தப்பா? :)

அதன் நீங்கள் வெற்றிடம் (பல்லியின் காலடியிலும் = Vaccum) என்று நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தால் நானும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று எடுத்துக்கொள்கிறேன். நன்றி

ஸ்ரீ said...

// கோபிநாத் said...

சூப்பர் ;)) //

டேங்க்சு கோபி சார் ;)

ஸ்ரீ said...

//சென்ஷி said...
சின்ன சின்ன கவிதைகள் எப்பவும் ரசிக்க முடியும்ங்கறதுக்கு உங்க எளிமையான வரிகள் உதாரணம்.. அதிலும் அந்த ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடி உவமை மிகவும் பிடித்திருக்கிறது :))//

ரொம்ப நன்றி சென்ஷி. பெருசு பெருசா எழுத தெரியாதுங்க :(. கூடியவிரைவில் முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ said...

//சென்ஷி said...
//ஒற்றை அன்றில்//

SUPER TITLE :))//

அட தலைப்பு மட்டும் தான் அழகா இருக்கு. உங்க பெயரே வித்தியாசமா அழகா இருக்கே!!

Sri said...

//அதன் நீங்கள் வெற்றிடம் (பல்லியின் காலடியிலும் = Vaccum) என்று நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தால் நானும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று எடுத்துக்கொள்கிறேன்.//
sorry sri puriyala......!! :-)

ஸ்ரீ said...

// Anonymous said...

Vaasam...imm..narttam thaan adikkum
kaadhal vayapadathirunthal..//

ஓ காதல் வயப்படாமல் இருந்தால்ன்னு சொல்ல வந்தீங்களா? அப்படின்னா சரி தான்.

//அதிலும் அந்த ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடி உவமை மிகவும் பிடித்திருக்கிறது//

//OK//

டீக் ஹை. நன்றி :)

ஸ்ரீ said...

//Sri said...

sorry sri puriyala......!! :-)//

ஆஹா!!! சரி பரவாயில்லை காதலை அறிவியலுடன் கலந்திருக்கக்கூடாதோ!! :)

புகழன் said...

புரிந்தும் புரியாமலும் சில கவிதைகள்
நல்லாயிருக்கு ஸ்ரீ
இப்படிக்கு
புகழன்

Divya said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ஸ்ரீ!!

\\எப்போது பார்த்தாலும்
என் முகத்தில் நீயும்,
உன் முகத்தில் நானும் தான் தெரிகின்றோம்.
ஆளில்லாத அழகுநிலைய கண்ணாடிகள் போல.\

ரசித்தேன் இவ்வரிகளை!!


\\எனக்குள் காதல் நுழைகையில்
குருதிவெள்ளணுக்கள் எதிர்க்காமல்
சிவப்பணுக்களாலான
பூங்கொத்தோடு வரவேற்றதே!
உனக்கும் அப்படித்தானே?\\

அட......இப்படி எல்லாம் கூடவா சிந்திக்க முடிகிறது, கலக்கல்ஸ் ஸ்ரீ!!

ஸ்ரீ said...

// புகழன் said...

புரிந்தும் புரியாமலும் சில கவிதைகள்//

வாங்க புகழன். புரியாமலா? :O

என்ன புகழன் சொல்றீங்க? நான் அதனால் தான் ரொம்ப சாதாரணமான வார்த்தைகளை கொண்டு கவிதை எழுத முயற்சிக்கிறேன். சரி இனி ஒரு விளக்கமும் சேர்த்து போட்டுடலாமா? :)


// நல்லாயிருக்கு ஸ்ரீ
இப்படிக்கு
புகழன்//

ரொம்ப நன்றி சகோதரதே!

ஸ்ரீ said...

// Divya said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ஸ்ரீ!!

ரசித்தேன் இவ்வரிகளை!!

அட......இப்படி எல்லாம் கூடவா சிந்திக்க முடிகிறது, கலக்கல்ஸ் ஸ்ரீ!!//

வாங்க திவ்யா நன்றிங்கக்கா. சிந்தனை உங்ககிட்ட இருந்து தொற்றிக்கொண்டது ;). சீக்கிரம் அடுத்த பாகம் கதையை போடுங்க மேடம்.

மஹாராஜா said...

//ன் நின்றால்
நிலைக்கண்ணாடிக்கே
நிலை கொள்வதில்லை.
என் நிலை சொல்லவேண்டுமா?

Enakku enna solrathu ne theriyala..
unmaiyileye neenga gr8 bro.

naanum yosichu paarkuren ,intha maramandaiyila onnum era maatenguthu.,.! [:D]

ayyoo..! Ayyo..!

All the Best.Nanba,.

ஸ்ரீ said...

//க. மஹாராஜா said...

Enakku enna solrathu ne theriyala..
unmaiyileye neenga gr8 bro.

naanum yosichu paarkuren ,intha maramandaiyila onnum era maatenguthu.,.! [:D]

ayyoo..! Ayyo..!

All the Best.Nanba,.//

ரொம்ப நன்றி மகாராஜன் முதல் வருகைன்னு நினைக்குறேன். எல்லாம் எழுத எழுத வந்துடும் நண்பரே. அடிக்கடி வ்ந்து போங்க :)