நாங்களும் பாடுவோம்ல

இத்தனை நாளா கவுஜைன்னு பேருல போட்ட மொக்கை போதாதுன்னு கொஞ்சம் அசைபோடலாமேன்னு வந்திருக்கேன். பள்ளி படிக்கும் போது நாம் பாடின பாட்டு போட சொல்லி அழைத்திருக்கார் 'காதல் முரசு'. பள்ளி வயதில் எனக்கு ஒரே ஒரு நண்பன் தான். அவனோடு தான் அதிகம் பொழுதை கழிப்பேன். எப்போதும் ஒன்றாய் தோள் மீதி கை போட்டு சுற்றி இருக்கிறேன். அவன் பெயர் 'தனிமை'. கொஞ்சம் பெரியவன் ஆன பின்னர் வழக்கம் போல ஒரு மட்டையை பிடித்து கிரிக்கட் விளையாடிய ஒரு சராசரி சிறுவன் தான் நான். அதனால் அந்த ஒரு அழகான காலம் என் வாழ்க்கையில் கொஞ்சம் குறைவு (ஒரு வேளை மறந்து போச்சான்னு கூட தெரியலை. இந்த மாதிரி எதுவும் பண்ணாதது நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்). அதனால் நண்பர்களோடு கூட பேசி சில பாட்டு பிடிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். அந்த உரையாடலில் கிடைத்த சில பாடல்கள் கீழே. அவர்கள் இந்த பாட்டெல்லாம் சொல்லும் போதே அழகான ஒரு சூழலில் இருப்பது போல உணர்ந்தேன். சில விஷயங்கள் இழந்துவிட்டோமோ என்ற எண்ணம் சற்று தலை தூக்கினாலும், இந்த வயதில், வேலை பலுவுக்கு இடையில் இதை நினைக்க வைத்ததற்காக நன்றி கோ.

அப்புறம் படித்த பாட்டு போடணும்னு சொல்லி இருக்காரு. நான் மட்டும் என்னங்க ஜெர்மன்லயா படிச்சேன்? எல்லாருக்கும் ஒரே தென்னமரம் போட்ட தமிழ் புத்தகம் தான். அதனால வகுப்பறைக்கு வெளியில் பாடின சுவாரசியமான பாட்டெல்லாம் தேடி இங்க போட்டிருக்கேன். (அடைப்புக்குள் இருக்கும் கமெண்டு மட்டும் தான் என்னுடையது).மொட்ட ராசாத்தி
ரொட்டி சுட்டாலாம்
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாலாம்
காசு பத்தலையாம்
கடக்காரனை பாத்து
கண் அடிச்சாலாம்.

(அட அட அட என்ன கருத்தம்சம் இருக்குறா மாதிரியான ஒரு பாட்டுங்க. இதை பாடப்புத்தகத்துல சேத்தா பசங்க ஏன் ஃபெயில் ஆகப்போறாங்க? படிச்ச முதல் முறையே மனதில் பதிந்திடுமே.)


A B C D
உங்கப்பன் தாடி
வந்தா வாடி
வராட்டி போடி.

(சூப்பர். கவனிச்சீங்களா பாட்டுல ஒரு பிசுறு கூட இல்லை. டி, டி, டி மற்றும் D. தமிழ் கூட ஆங்கிலத்தை சேத்து ஒரு அருமையான நடையில் தமிழ் வளர்த்திருக்கார் யாரோ ஒரு மூத்த கவிஞர். யாருக்காவது அவர் பேர் தெரிஞ்சா சொல்லுங்கப்பு. எனக்கென்னமோ இவர் ஒரு விளையாட்டு பிள்ளையா (play boy) இருந்திருப்பார்னு தோணுது. அதான் வந்தா வாடி இல்லாட்டி போடி அப்படின்னு ஆணித்தனமா பாடி இருக்கார்.)


பக்கத்து வீட்டு நிருமலா
உனக்கு என்ன இருமலா?
வாங்கி தரேன் விக்ஸு
என் டோரு நம்பர் சிக்ஸு.

(கண்டிப்பா இதை சொன்னவர் சங்கர் நேத்திராலயாவுல இந்நேரம் முதன்மை மருத்துவர் ஆகியிருப்பார் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை.)


ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு
டாமு டூமு டைய்யா
அஸ்கலக்கடி ஜாமு சுந்தரி
என் பேர் உய்யா.

(இந்த பாடலின் பனை பூம்புகார்ல இருந்ததால கடல் கொண்டு போயிடுச்சாம் தெளிவான குறிப்புகள் இல்லை. அதனால பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் மக்களே. சரியான வரிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. அருமையான பாட்ட வளக்கறது நம்ம கடமை இல்லையா?)


தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவு உளுந்த மாவு
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு,
அம்மாவுக்கு மூணு,
அண்ணனுக்கு ரெண்டு,
பாப்பாவுக்கு ஒன்னு
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டா பூசை.

(யாருன்னு தெரியல யாரோ தீனிப்பண்டாரம் சார் பாடுனது போல. இவரோட இன்னொரு பாட்டும் இருக்குன்னு சொன்னாங்க ஆனா அது அவர் கோவதுல இருக்கும் போது பாடுனது போல.

அது...


ஐஸ் ஐஸ் ஐஸ்
அஞ்சி பிஸா ஐஸ்
ஆப்பிள் ஜீஸ்
நீ ஒரு லூஸ்.)

மேல சொன்ன பாடல்களுக்கு தனியா சுதி, ராகம், லயம் எல்லாம் இருக்குங்க நீங்க பாட்டுக்கு உங்களோட சொந்த ராகத்துல பாடி ரீமிக்ஸ் பண்ணிடாதீங்க ராசா.


நான் அழைக்கும் மூன்று தோழர்கள்,

1. 'ரொம்ப நல்லவன்' ட்ரீம்ஸ்,
2. நாடோடி இலக்கியன்,
3. கோபால்.


நியாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

29 கால்தடங்கள்:

கோபிநாத் said...

ஸ்ரீ நான் போட நினைத்த ரெண்டு பாட்டை நீயும் போட்டு இருக்கே...;)))

எல்லோரும் ஒரே குட்டை தான் ;))

Sri said...

ஸ்ரீ..!!!!!! பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருந்தது....:-)ஆனால் இந்த பாடல்ல....
//தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
கடலை மாவு உளுந்த மாவு//

கடலை மாவு உளுந்த மாவு இல்ல ஸ்ரீ அது அரிசி மாவு, உளுந்த மாவு......sorry first time comment ezhuthumbothe thappu kandupidichathukku....:(...
ungal padaippu ellam padithen...அருமை.....!!!!!

ஸ்ரீ said...

// கோபிநாத் said...

ஸ்ரீ நான் போட நினைத்த ரெண்டு பாட்டை நீயும் போட்டு இருக்கே...;)))

எல்லோரும் ஒரே குட்டை தான் ;))//

ஹா ஹா ஏ!!!!

நான் முந்திக்கிட்டேன் கோபி சார். :)

நான் போட்ட 5 பாட்டுல 2 பாட்டு நீங்களும் யோசிட்டீங்களா? வேற பாட்டு யோசிக்கணுமா? :))

இப்போதான் மனசு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு ;)

Dreamzz said...

chinna pulla thanama irukku :)

hah!

nalla songs :) ithula enakku vera aapa? nalla iruppaa!

Divya said...

\\தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
கடலை மாவு உளுந்த மாவு
கலந்து சுட்ட தோசை\\

நாங்க எல்லாம் 'அரிசிமாவும் உளுந்த மாவும்' கலந்து சுட்ட தோசைன்னு தான் பாடினோம்.....உங்க ஊருல கடலைமாவு கலந்தா தோசை சுடுவாங்க???

சத்யா said...

nalla thymes sollareenga! unga kaadhal kavidhaigal ellam (itharku munthi eluthinatu) asathal!

ஸ்ரீ said...

//Sri said...

ஸ்ரீ..!!!!!! பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருந்தது....:-)ஆனால் இந்த பாடல்ல....
//தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
கடலை மாவு உளுந்த மாவு//

கடலை மாவு உளுந்த மாவு இல்ல ஸ்ரீ அது அரிசி மாவு, உளுந்த மாவு......sorry first time comment ezhuthumbothe thappu kandupidichathukku....:(...
ungal padaippu ellam padithen...அருமை.....!!!!!//

வாங்க வாங்க Sri. முதல் வருகை. அட தவறு சுட்டிக்காட்டியதுக்கு ரொம்ப நன்றிங்க.

ஒரு திட்டு = இரண்டு வாழ்த்து.

ரொம்ப நன்றி. நம்ம பேர்லயே இருக்குறீங்க ;)

ஸ்ரீ said...

//Dreamzz said...

chinna pulla thanama irukku :)

hah!

nalla songs :) ithula enakku vera aapa? nalla iruppaa!//

இதெல்லாம் என்ன ட்ரீம்ஸ் ஆப்பு?

நீங்க எல்லா ஆப்பயும் தாங்கிக்குவன்னு தான் உனக்கு புதுசா "ரொம்ப நல்லவன்னு" ஒரு பட்டம் தந்திருக்கேன் நீ வேற!

ஸ்ரீ said...

// Divya said...

நாங்க எல்லாம் 'அரிசிமாவும் உளுந்த மாவும்' கலந்து சுட்ட தோசைன்னு தான் பாடினோம்.....உங்க ஊருல கடலைமாவு கலந்தா தோசை சுடுவாங்க???//

சரி தான் திவ்யா இப்போ தான் எனக்கே புரியுது. எனக்கு சொல்லிக்கொடுத்தவன் இப்படி சொல்லித்தொலைச்சுட்டான்.

கடலை மாவுல தோசை சுட முடியாதா? சுடலாம் ஆனா சாப்பிட தான் முடியாது :))

Sri said...

ஸ்ரீ என்னால் உங்கள் குழல்,காதல் அரக்கி போன்ற எல்லா கவிதைகளையும் படிக்க முடியவில்லை...white page than display aaguthu....:( but i want to read.what i have to do for it?!?

எழில்பாரதி said...

ராசா உன் வேலையை சரியா முடிச்சிட்ட

நல்லது நான் போட நினைச்ச பாட்டும் போட்டாச்சா...

சரி அப்போ நான் வேற பாட்டு யோசிக்கிறேன்!!!

நல்ல பாட்டுங்க எல்லாம்.....

ஸ்ரீ said...

//Sri said...

ஸ்ரீ என்னால் உங்கள் குழல்,காதல் அரக்கி போன்ற எல்லா கவிதைகளையும் படிக்க முடியவில்லை...white page than display aaguthu....:( but i want to read.what i have to do for it?!?//

ஒ அப்படியா? நீங்கள் படத்தின் மேல் சொடுக்கினால் படம் தனியாக ஒரு பக்கத்தில் தெரியும். அது நடக்கவில்லை என்றால் இந்த தளத்தில் பார்க்கலாம்.

http://s242.photobucket.com/albums/ff76/snazzysri

மேல் உள்ள தளத்தில் 3 அல்லது 4 ஆம் பக்கதில் இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி.

Sri said...

Sri read all the poems...very very nice....:-)

sathish said...

அருமை ஸ்ரீ :))

நாங்க பள்ளியில் படித்த காலத்தில் அப்போது வந்த தமிழ் பட பாடல்களை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து பாடித்திரிவோம் :))

கோபால் said...

மொட்ட ராசாத்தி???

மொட்ட பாப்பாத்தி"னு தான் இதுவரைக்கு நான் பாடி இருக்கேன்.

ஸ்ரீ said...

//சத்யா said...

nalla thymes sollareenga! unga kaadhal kavidhaigal ellam (itharku munthi eluthinatu) asathal!//

ரொம்ப நன்றிங்க சத்யா சார்.

ஸ்ரீ said...

//எழில்பாரதி said...

ராசா உன் வேலையை சரியா முடிச்சிட்ட

நல்லது நான் போட நினைச்ச பாட்டும் போட்டாச்சா...

சரி அப்போ நான் வேற பாட்டு யோசிக்கிறேன்!!!

நல்ல பாட்டுங்க எல்லாம்.....//

பொறுமையா யோசிங்க மேடம் நிறைய பாட்டு இருக்கு ஆனா நீங்க யோசிச்சு முடிக்கறத்துக்குள்ள அதை வேற யாராவது போட்டுடப்போறாங்க :)

ஸ்ரீ said...

// Sri said...

Sri read all the poems...very very nice....:-)//

நன்றி Sri. படிச்சதுக்கப்புறம் நல்லா இருக்கீங்க இல்லை அப்போ சரி ;)

ஸ்ரீ said...

//sathish said...

அருமை ஸ்ரீ :))

நாங்க பள்ளியில் படித்த காலத்தில் அப்போது வந்த தமிழ் பட பாடல்களை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து பாடித்திரிவோம் :))//

ஆமாம் சதீஷ் நாங்க கூட அப்படி பாடியதுண்டு. அடுத்த தலைமுறை அப்படி பாட வாய்ப்பில்லை ஏன்னா வர பாட்டு எல்லாமே ஆங்கிலத்துல தான வருது வேணும்னா அவங்க அப்போ தமிழ் வார்த்தைகள் போட்டு பாடிக்கவேண்டியது தான். தமிழ் வாழ்க!

ஸ்ரீ said...

// கோபால் said...

மொட்ட ராசாத்தி???

மொட்ட ***த்தி"னு தான் இதுவரைக்கு நான் பாடி இருக்கேன்.//

அடடா கோபால் இதென்ன செய்யுளா? நீங்க சொன்னது தான் பாட்டு என்றாலும் மற்றவர் மனது புண்படக்கூடாது என மாற்றிவிட்டேன். பூ-வ பூவுன்னும் சொல்லலாம், நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம் அவர் சொல்றா மாதிரியும் சொல்லலாம். என்ன பாட்டெல்லாம் தயார் பண்ணிட்டீங்களா?

திகழ்மிளிர் said...

/மொட்ட பாப்பாத்தி
ரொட்டி சுட்டாலாம்
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாலாம்
காசு பத்தலையாம்
கடக்காரனை பாத்து
கண் அடிச்சாலாம். /

:))))))))))))

மனதோடு மனதாய் said...

அந்த நாள்
ஞாபகம்
நெஞ்சிலே
வந்ததே

மலரும் நினைவுகளைக் கொண்டு வந்த ஸ்ரீக்கு வாழத்துக்கள்.
நல்ல கலக்குங்க ஸ்ரீ

ஸ்ரீ said...

திகழ்மிளிர் said...

/மொட்ட ***த்தி
ரொட்டி சுட்டாலாம்
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாலாம்
காசு பத்தலையாம்
கடக்காரனை பாத்து
கண் அடிச்சாலாம். /

:))))))))))))

ஏங்க தமிழ்மிளிர் இந்த வெறி? எல்லாரும் அதே பாட்டையே குறிவைத்து தாக்குறீங்களே!!

ஸ்ரீ said...

//மனதோடு மனதாய் said...

அந்த நாள்
ஞாபகம்
நெஞ்சிலே
வந்ததே

மலரும் நினைவுகளைக் கொண்டு வந்த ஸ்ரீக்கு வாழத்துக்கள்.
நல்ல கலக்குங்க ஸ்ரீ//

எனக்கும் அப்படித்தான் தோழரே!

என்னை எழுத சொன்ன "கோ"வுக்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும் வந்தமைக்கு நன்றி நண்பரே!

Sri said...

//படிச்சதுக்கப்புறம் நல்லா இருக்கீங்க இல்லை அப்போ சரி ;)//

இதற்கு பெயர் தான் தன்னடக்கமா????

கோபால் said...

எங்கங்க பாட்ட‌ யோசிக்க விடுறாங்க :( ஆணி பிடுங்கவே நேரம் சரியா இருக்கு. ஒரு பாட்ட யோசிச்சு வெச்சா அதுக்குள்ள அடுத்துவங்க அத பதிவு செய்தற்றாங்க. யோசிச்சுட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

ஸ்ரீ said...

//Sri said...

//படிச்சதுக்கப்புறம் நல்லா இருக்கீங்க இல்லை அப்போ சரி ;)//

இதற்கு பெயர் தான் தன்னடக்கமா????//

அப்படி இல்லைங்க இதுக்கு எங்க ஊர் பக்கம் 'அக்கரை'ன்னு சொல்லுவாங்க. ;)

ஸ்ரீ said...

//கோபால் said...

எங்கங்க பாட்ட‌ யோசிக்க விடுறாங்க :( ஆணி பிடுங்கவே நேரம் சரியா இருக்கு. ஒரு பாட்ட யோசிச்சு வெச்சா அதுக்குள்ள அடுத்துவங்க அத பதிவு செய்தற்றாங்க. யோசிச்சுட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.//

ஹா ஹா அதான் மக்கா நான் உடனே பதிவை போட்டுட்டேன். இந்த வார இறுதி யோசிச்சு போட்டுடுங்க :)

Sri said...

உங்க 'அக்கறை'க்கு ரொம்ப நன்றி ஸ்ரீ.....!!!! :-)