தூங்காத இதயம் ரெண்டு
காலிடுக்கில்
தூங்கிய தலையணையை
மார்புக்கு குடியேற்றியது
உன் காதல்.

Photobucket

உன் தூக்கத்தை ரசிக்கவில்லை,
நீ உறங்க இரவு முழுதும்
என் இமைகளால்
சாமரம் வீசிக்கொண்டிருந்தேன்
அவ்வளவு தான்.

Photobucket

யார் சொன்னது
காதலித்தால்
கனவு தேசத்தில் மிதக்கலாம் என்று?
எனக்கு தூக்கமும் பூப்பதில்லை,
கனவும் காய்ப்பதில்லை,
உனக்கெப்படி?

Photobucket

இரவெல்லாம் விழித்திருந்து
மறுநாள் உன்னிடம்
நம் இதயங்கள்
ஒத்தியங்குவதை சொன்னால்,
வெகு இயல்பாக
"ஒரு இதயம் துடித்தால்
எப்படி இரண்டு சத்தம் கேட்கும்?" என்கிறாய்.
நான் இன்னும் அதிகம் காதலிக்க வேண்டுமோ?

Photobucket

இரவானால்
தூக்கத்துக்கு மாறாக
ஏக்கம் தொற்றிக்கொள்(ல்)கிறது.
இதை விட ஒரு சாட்சி தேவையா
என் காதலை நிரூபிக்க?

Photobucket

இரவில்
நம்மை பிரித்துவிட்டதாய்
எண்ணி சிரிக்கிறான்
பொறாமைக்காரன் கடவுள்.
அவனுக்கு சொல்லவேண்டும்
நாம் அதிகம் நம்மை பற்றி
அப்போது தான் நினைக்கிறோம் என.

Photobucket

இரவில்
நிலவும் உனைக்காணா நேரம்
வடித்த கண்ணீர் தானோ?
விடியலில்
புற்களிலும், பூக்களிலும்.

(இது மட்டும் ஒரு பழைய கவிதை, தலைப்போடு ஒத்துப்போன காரணத்தால் மறுபதிவு இட்டுள்ளேன்)

PhotobucketPhotobucketPhotobucket


புத்தாண்டு அழகா ஆரம்பமாயிடுச்சு. மொக்கையா ரெண்டு கவிதை அதுக்கு சொல்லலைன்னா தூக்கம் வராது, அதனால நீங்க என்னை திட்டினாலும் பரவாயில்லைன்னு கீழே போட்டிருக்கேன். (முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மோளம் அடிச்சுகிட்டுன்னு நினைச்சு 2 மட்டும் போடுறேன்).


வருடப்பிறப்புக்கு பதில்
நிமிடப்பிறப்பு கொண்டாடுகிறது மனம்
நீ அருகில் இருக்கும்
தருணங்களில்...

Photobucket

அழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு
அதே நாட்காட்டியில் முற்றுபுள்ளியில்லை
நீயில்லாமல் முடிவற்றுக்கிடக்கும்
என் வாழ்க்கை போல.

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

26 கால்தடங்கள்:

திகழ்மிளிர் said...

/இரவானால்
தூக்கத்துக்கு மாறாக
ஏக்கம் தொற்றிக்கொள்(ல்)கிறது./

:))))))))

Thangam said...

//இரவானால்
தூக்கத்துக்கு மாறாக
ஏக்கம் தொற்றிக்கொள்(ல்)கிறது.
இதை விட ஒரு சாட்சி தேவையா
என் காதலை நிரூபிக்க?//

சூப்பர் ஸ்ரீ.

Divya said...

வழக்கம்போல் கவிதை ஏக்கமும்...காதலுமாக அழகாக இருக்கிறது ஸ்ரீ!!

Sri said...

Wow very very nice poems.........!!!!!!!!!!
enjoyed a lot.....!!!!!!!
keep it up.....:-)

கோபிநாத் said...

\\Divya said...
வழக்கம்போல் கவிதை ஏக்கமும்...காதலுமாக அழகாக இருக்கிறது ஸ்ரீ!!
\\

ரீப்பிட்டே ;))

மனதோடு மனதாய் said...

//உன் தூக்கத்தை ரசிக்கவில்லை,
நீ உறங்க இரவு முழுதும்
என் இமைகளால்
சாமரம் வீசிக்கொண்டிருந்தேன்
அவ்வளவு தான்.
//
அழகிய வரிகள்
தொடர்ந்து எழுதுங்கள்
புத்தகமாகவும் நீங்கள் எழுதியதைப் போட முயற்சிக்கலாம்.

இப்படிக்கு புகழன்

sathish said...

//அழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு
அதே நாட்காட்டியில் முற்றுபுள்ளியில்லை//

ஆழம் இரசித்தேன் ஸ்ரீ :)

கவிதைகள் சரியான அளவில் இருக்கின்றன மிக அருமை!

எழில்பாரதி said...

கவிதைகள் அருமை ஸ்ரீ

//உன் தூக்கத்தை ரசிக்கவில்லை,
நீ உறங்க இரவு முழுதும்
என் இமைகளால்
சாமரம் வீசிக்கொண்டிருந்தேன்
அவ்வளவு தான்.//

அருமை!!!!

Dreamzz said...

//அழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு
அதே நாட்காட்டியில் முற்றுபுள்ளியில்லை
நீயில்லாமல் முடிவற்றுக்கிடக்கும்
என் வாழ்க்கை போல.//

ஸ்ரீ! கலக்கிட்டப்பா! கவிதை எல்லாமே அழகு! ஆனா ஒரே கவிதையில் இரண்டு சோகத்தை சொன்னதால் இது அல்டி!

பிரேம்குமார் said...

அடடே அட்டகாசமான பதிவு! வாழ்த்துக்கள்

ஸ்ரீ said...

//திகழ்மிளிர் said...

:))))))))//

(((((((:

ஸ்ரீ said...

// Thangam said...

சூப்பர் ஸ்ரீ.//

ரொம்ப நன்றிங்க தங்கம்.

ஸ்ரீ said...

// Divya said...

வழக்கம்போல் கவிதை ஏக்கமும்...காதலுமாக அழகாக இருக்கிறது ஸ்ரீ!!//

நீங்களும் வழக்கம் போல் வந்து மறுமொழி இட்டதுக்கு நன்றி திவ்யா :)

ஸ்ரீ said...

// Sri said...

Wow very very nice poems.........!!!!!!!!!!
enjoyed a lot.....!!!!!!!
keep it up.....:-)//

"keep it up" னு சொல்லிட்டீங்களா?

வெச்சிட்டா போச்சு :)

நன்றி Sri.

ஸ்ரீ said...

//கோபிநாத் said...

ரீப்பிட்டே ;))//

என்ன தல ரிப்பீட் அடிக்கிறீங்களா? :) நன்றி.

ஸ்ரீ said...

// மனதோடு மனதாய் said...

அழகிய வரிகள்
தொடர்ந்து எழுதுங்கள்
புத்தகமாகவும் நீங்கள் எழுதியதைப் போட முயற்சிக்கலாம்.

இப்படிக்கு புகழன்//

புத்தகமா புகழன்? அந்த அள்வுக்கு வளரவில்லை என நினைக்கிறேன் நான் :). நிச்சயம் போடுவோம் ஒரு நாள்.

சத்யா said...

கவிதை ஒவ்வொன்றும் அருமை.

சத்யா said...

அழகிய வரிகள்
தொடர்ந்து எழுதுங்கள் -- ஆமாங்க!

ஸ்ரீ said...

//sathish said...

//அழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு
அதே நாட்காட்டியில் முற்றுபுள்ளியில்லை//

ஆழம் இரசித்தேன் ஸ்ரீ :)

கவிதைகள் சரியான அளவில் இருக்கின்றன மிக அருமை!//

அப்பாடா மாப்பி நீங்க தான் சரியான கவிதைய பிடிச்சீங்க. எனக்கும் என்னமோ அது தான் ரொம்ப பிடித்திருந்தது.

நன்றி சதீஷ்.

ஸ்ரீ said...

//எழில்பாரதி said...

கவிதைகள் அருமை ஸ்ரீ
அருமை!!!!//

நன்றிங்க மேடம்.

ஸ்ரீ said...

//Dreamzz said...

ஸ்ரீ! கலக்கிட்டப்பா! கவிதை எல்லாமே அழகு! ஆனா ஒரே கவிதையில் இரண்டு சோகத்தை சொன்னதால் இது அல்டி!//

அது "டூ யின் ஒன்" கவிதை மக்கா. புத்தாண்டு வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்.

ஸ்ரீ said...

// பிரேம்குமார் said...

அடடே அட்டகாசமான பதிவு! வாழ்த்துக்கள்//

அடடே ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க சித்து. நன்றி ஹை.

ஜி said...

attakaasam... arputham... arumai... adadada...

epdinga ipdi ellaam???

ஸ்ரீ said...

//ஜி said...

attakaasam... arputham... arumai... adadada...

epdinga ipdi ellaam???//

வாங்க தல,
எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.

நாடோடி இலக்கியன் said...

கவிதைகள் அனைத்தும் அருமை.ஒவ்வொரு பதிவிலும் மெருகேறிக்கொண்டே வருகிறீர்கள்.
தொடருங்கள்.
வாழ்த்துகள் ஸ்ரீ..!

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

கவிதைகள் அனைத்தும் அருமை.ஒவ்வொரு பதிவிலும் மெருகேறிக்கொண்டே வருகிறீர்கள்.
தொடருங்கள்.
வாழ்த்துகள் ஸ்ரீ..!//

வாங்க இலக்கியன் ரொம்ப நாளாச்சு. ரொம்ப ஆணியோ? நன்றி இலக்கியன் எல்லாம் உங்ககிட்ட இருந்து தொற்றிக்கொண்டது தான்.