நீ

நீ
எச்சில் படுத்திய தேநீர்
தேன் நீர்!

இருபுறமும் இதயமெனக்கு
புகைப்படத்தில் மட்டும்
என் வலப்பக்கம்
நீ!

நீயில்லாமல்
ஊமையாய் போனது
நான் மட்டுமல்ல‌
என் முந்தக்கூவியும் தான்.

நீ
முத்தமிட்ட பின் தான்
என்
சுவை மொட்டுக்கள்
மலர்ந்தன.

தொடக்கத்திலும்
முடிவிலும்
பக்கங்கள் கிழிந்து போன‌
பிரம்மன் எழுதிய‌
பிரசித்தி பெற்ற‌
மர்ம நாவல்
நீ!


காதல் அழிவதில்லை...
ஸ்ரீ

2 கால்தடங்கள்:

பிரேம்குமார் said...

அட‌டா, இங்கேயும் ஒரு காத‌ல் தூதுவ‌ர் இருக்காரே. அருமையான‌ க‌விதை(க‌ள்) ஸ்ரீ.

'முந்தக்கூவி' - அருஞ்சொற்பொருள் விள‌க்க‌ம் தேவை

ஸ்ரீ said...

வணக்கம் ப்ரேம்,
கருத்துக்கு ரொம்ப நன்றி நண்பரே!
"முந்தக்கூவி" என்றால் செல்பேசி என எங்கோ படித்திருக்கிறேன்.