நன் பண்

மீசை அரும்பிய பருவம்
நான் பேசும் மொழி
பெற்றவருக்கும் மற்றவருக்கும்
புறியாமல் இருக்க‌
என் பாஷை பேசி அருகிலமர்ந்தாய்!

சில நேரம்
இரத்தசொந்தங்களும்,இதயச்சொந்தமும்
என்னை குறை கூற‌
அந்த குறைகளோடென்னை
சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டாய்!

சுவாசிக்கவே சோம்பேறித்தனம் படுவாய்
தூக்கத்தில் பசியென நான் உளற‌
கையேந்திபவன் இட்லியோடு
நள்ளிரவில் எழுப்பினாய்,

தூக்கத்துக்காக சாகவும் செய்வாய்
மூன்று மணி நேரத்துக்கொரு முறை
என்னை எழுப்பி
மருந்தை வாயில் திணித்தாய்.

கம்யூனிசம் முதல்
காமசூத்திரம் வரை விவாதம்,
ஒரே குவளை பீர்,
ஒரிலை சோறு,
ஒரு போர்வை தூக்கம்
எப்படி மறப்பேன்?

கொலைப்பழி என் மேல் இருப்பினும்
என் பங்கு எங்கே?
என சட்டையைப் பிடிப்பாயே!

உன்னிடம் நட்புக்கு
கர்ணனே கையேந்துவானடா!
கவலைபடதே நமைப்பிறிக்க‌
அந்த சூழ்ச்சிக்கார கண்ணன் இல்லை.

என் இடப்பக்கம் எப்பவுமே
காலியாகவே இருக்கும் உனக்காக...
அழகான வார்த்தை நண்பன்
ஆனால் தமிழில் எப்போதுமே
தவறாக எழுதப்படுகிறதோ?

"நன்ண்" தான் சரி!!

இந்த நண்பர்கள் தினத்தன்று குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்ட என் நண்பர்களுக்காக சமர்ப்பனம்.

நட்பும் அழிவதில்லை...
-ஸ்ரீ.

2 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் அன்பரே...!

நட்பு வாழ்க !

ஸ்ரீ said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!