உன்

அதென்னடி ரகசியம்?
உன்
கூந்தல் சேரும்
பூக்கள்
உயிர்த்தெழுகின்றன?

உன்
உதட்டு ரேகை
கிடைக்குமா?
எனக்கு ஜோசியம்
பார்க்க வேண்டுமாம்.

உன்
இமைப்புகளின்
எதிரொலியே
என் இதயத்துடிப்புகள்.

உன்
ஒற்றை முடி
கொடுப்பாயா?
என் உயிர் கட்டத்தேவை!

உன்
சிரிப்பை
கொஞ்சம் கடன் தா
மோனாலிசாவை
வெறுப்பேற்ற ஆசை.


காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

2 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

முற்ப்பிறவியில், ஸ்ரீயாரிடமிருந்து மோனாலிசா அம்மையார் புன்னகை வரம் பெற்றதாக வேதாளத்தார் செய்தி கூறினார்.....!

ஸ்ரீ said...

வேதாளம் ஏன் பொய் சொல்கிறது? "மோனாலிசா அம்மையாரா?" உலக சர்ச்சையான விஷயம்.நமக்கேன் வம்பு ;)