கன்னி ராசி

ஒவ்வொரு நாளும்
நான்
போய் வரும் போது
ஜன்னல் கம்பிகளில்
புன்னகைப் பூத்திருக்கும்
கண்களாலேயே
கையசைப்பாய்
திடீரென்று
உன்னைக் காணவில்லை
என் மின்னலைக்
கைது செய்தது யார்?
பிறகு தான் தெரிந்தது
உனக்குத் திருமணம் ஆகிவிட்டது.
என்ன செய்வது?
எனக்கு ராசி மட்டும் தான்
"கன்னி".

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

2 கால்தடங்கள்:

விக்ரமாதித்தன்...! said...

என் நெஞ்சை என்றென்றும் பதம் பார்க்கும் வார்த்தைகள்.... தங்களின் கவிதை எனக்கு மிக்க பொருந்தும்...

என் பால்ய நினைவுகள் அசைபோடுகின்றன ...........!

- விக்ரமன் !

ஸ்ரீ said...

//விக்ரமாதித்தன்...! said...

என் நெஞ்சை என்றென்றும் பதம் பார்க்கும் வார்த்தைகள்.... தங்களின் கவிதை எனக்கு மிக்க பொருந்தும்...

என் பால்ய நினைவுகள் அசைபோடுகின்றன ...........!

- விக்ரமன் !//

உங்கள் பின்னூட்டம் தான் விக்ரமா அழகு. உங்களை பின்னோக்கி பார்க்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே. வந்தமைக்கு நன்றி