வாழ்நாள் சேகரிப்பவன்

உன் கண்சிமிட்டல்களைச் சேகரித்தால்
மின்னல்,
உன் புன்னகைகளைச் சேகரித்தால்
பூந்தோட்டம்,
உன் க்ண்ணீர்த்துளிகளைச் சேகரித்தால்
ஆலகாலம்,
உன் இதழ்த்துளிகளை சேகரித்தால்
தேன்கூடு,
உன் வெட்கத்தினை சேகரித்தால்
அந்தி,
உன் இதயத்துடிப்பைச் சேகரித்தால்
என் வாழ்நாட்கள்!


என்னவளே!
உனக்குத்தெரியுமா?
தாஜ்மகாலின்
சுவரில்
உன் பெயரையும்
என்
அடுப்புக் கரியால்
எழுதி வைத்தேன்
எல்லோரும்
அதிசயமாய்ப் பேசிக்கொள்கிறார்கள்
அந்த எழுத்துகளில் தான்
ரோஜாவின் மணம் வீசுகிறதாம்.
என்னை
இப்போதும்
"பைத்தியம்" என்கிறாயா?

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

6 கால்தடங்கள்:

Anonymous said...

ஸ்ரீயார் அவர்களே...!

"உலக அதிசயத்தில் ஏன் அடுப்புக்கரியால் கிறுக்கினீர்... இந்த பொல்லா உலகம் வையும்..."
"ரோஜா மனம் எதற்க்கு..ரோஜா நிறம் கொண்ட திரவத்தால் என்றோ அந்த இதயத்தில் எழுதி விட்டீரே ..."

- வேதாளத்தாரின் கூற்று... !

ஸ்ரீ said...

ஹா ஹா!

ஒரு உலக அதிசயத்தில் இன்னொரு அதிசயத்தின் பெயர் எழுதுகின்றேன் அவ்வளவே!

பல நேரம் மருந்தானாலும்
சில நேரம் முட்களாக மாறி காயப்படுத்துவதால்
காதலுக்கு சரியான சின்னம் தான்
‍‍- ரோஜா.

ரோஜாவின் மணம் தான் காதலின் மணமும். (என் தாழ்மையான கருத்து)

Anonymous said...

மறுப்பதிர்க்கில்லை ஸ்ரீயார் அவர்களே !

தங்களின் அடுத்த கீதாஞ்சலிக்காகக் காத்திருக்கும் உங்கள் அன்பு விக்ரமன்...
காதலின் ரீங்காரம் என் காதின் வழி பாயட்டும்...!

-அன்பு நெஞ்சம் !

ஸ்ரீ said...

கண்டிப்பாக. இதோ இன்னும் ஒரு பாடல் உங்களுக்கு. "கவியானவன்" கதவு எப்போது திறக்கும்?

Anonymous said...

ஸ்ரீயாரே.....

கவியானவன் ..... இவன் காதல் குடியானவன்.... வீடிருந்தால் கதவிருக்கும்.... இவன் காட்டில் வேதாளத்தோடு ......
ஆதரவளிப்போர் யாருமின்றி வாழ்பவன் ....

ஆதரவு கிடைக்குமா ?

ஸ்ரீ said...

அன்பு விக்ரமா,

ஆதரவுக்கு வேதாளம் இல்லையா? மன அமைதி தந்தால் வேதாளம் கூட நல்ல துணை ஆகலாமே! :)