இந்த மாதம் காதல் மாதமாகத் தான் பார்க்கப்படுகின்றது. நானும் வேலண்டைன் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று தான் இருந்தேன். அதை யாராவது என்னை விட சிறப்பாக செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் கைவிட்டு வேறு ஏதாவது எழுதலாம் என யோசித்த நேரம் தான் வரலாற்றில் இருந்து ஒரு காதல் ஜோடியைப் பற்றிய தகவல் தந்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. வழக்கம் போல லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் என தான் யோசித்தேன்.
ஆனால் காதலுக்கும் வேறு ஒரு பரிமாணம் இருக்கின்றது! அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த காதலர்கள் வரிசையில் முதலில் வருவது ஹிட்லர் - ஈவா ப்ரான். காதலா? ஹிட்லரா? அவருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஹிட்லரின் காதல் என்னை கவர்ந்ததற்கு காரணம் ஹிட்லர் அல்ல ஈவா.
20 ஏப்ரல் 1889 பிறந்த ஹிட்லரும் ஒரு சாதாரண மனிதனாகத் தான் இருந்தார். தோல்விகள் தவிர வேறு ஒன்றும் அறியாமலே வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடிக்கவில்லலை, சிறு வயதிலே பெற்றோர்களின் இழப்பு, நண்பர்கள் இல்லை, வேலையில்லாமல் வியன்னா நகரத்தில் சுற்றித்திரிந்திருக்கிறார். ஓவியன் ஆக ஆசைப்பட்டவர் ஹிட்லர். இதை குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், ஓவியம் தான் என்னை பொருத்தவரை மென்மையான கலை. அப்படி ஒரு கலை உணர்வு இருந்த ஒருவர் பின்னர் சர்வாதிகாரியாக மாறியது வேறு ஒரு கதை. அவர் வாழ்ந்த 56 ஆண்டுகளில் முதல் 30 வருடம் அவர் வெறும் தோல்வியின் மறு உருவாகத்தான் இருந்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் ராணுவ வீரனாக (வகித்த பதவி "ரன்னர்" - டாம் ஹாங்க்ஸ் நடித்த "ஃபாரஸ்ட் கம்ப்" படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும், அது வீரர்களுக்கு தகவல்கள் மற்றும் கட்டளைகள் எடுத்து சென்று சேர்க்கும் ஒரு பணி) சேர்ந்தார். பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து 1933ல் 'சான்ஸ்லர்' பதவியை அடைந்தார். அடுத்த மூன்று வருடங்களில் 60 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தந்தார். அந்த காலத்தில் தான் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டு பின்னர் அது உலகப்புகழ் "வோக்ஸ்வேகன்" ஆனது. அவர் ஆட்சியில் தொழிற்சாலைகள் எல்லா சரியாக நடந்தது காரணம் முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு அறியாதவர் ஹிட்லர். யார் செய்தாலும் தவறு தவறு தான். அந்த காலத்தில் ஜெர்மனியின் கடவுளாக பார்க்கப்பட்ட ஹிட்லர் பின்னர் சாத்தானாக மாறியது சோகமே.
அவரின் காதல் கடைசி காலத்தில் தான் தோன்றியது. ஒருவேளை அது கொஞ்சம் முன்னமே தோன்றி இருந்தால் ஜெர்மனிக்கும் ஒரு லிங்கன் கிடைத்திருக்கக்கூடும். முன்பு ஒரு சமயம் ஜெலி ராபால் என்ற தன் சகோதரியின் மகள் மீது அவர் ஆர்வம் காட்டி இருக்கிறார். ஆனால் பின்பு ஈவா ப்ரான் உடன் அவர் நெருங்கிப்பழக ராபாலிடம் இருந்து விலக ஆரம்பித்தார். ஈவாவிடம் இருந்து ஹிட்லருக்கு வந்த கடிதம் ஒன்றை படித்த ராபாலி தற்கொலை செய்து கொண்டார் (செப்டெம்பர் 1931).
1945 ஏப்ரல் 22 பெர்லின் மீது பிரிட்டிஷ் விமானங்கள் குண்டு மழை பொழிய தன் சாம்ராஜ்யம் சரியத்தொடங்கியதை பார்த்த படி இருந்தார் ஹிட்லர். அப்போது ஈவா-வை தப்பித்து போகும் படி பணித்தார் அவர். ஈவா அவர் கைகளை பிடித்துக்கொண்ட்டு "கடைசி வரை உங்களோடு தான் இருப்பேன்" என கூற எல்லோர் முன்னிலையிலும் அவர் உதட்டில் முத்தமிட்டார் ஹிட்லர். அந்த தருணத்தில் தான் ஈவா-வை மணப்பதாக முடிவெடுத்தார் ஹிட்லர். திருமண சான்றிதழில் முதலில் "Eva.B" என கையெழுத்திட்ட ஈவா ப்ரான் பின்னர் அதை அடித்துவிட்டு "Eva Hitler" என கையெழுத்திட்டார். இது நடந்தது 28 ஏப்ரல் 1945 இரவு 11:55.
இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றலாம் ஆனால் ஈவாவின் காதல் சற்றே சிந்திக்க வைக்கிறது. அந்த காலத்தில் பாதுகாப்புக்காக எத்தனையோ பெண்கள் தனக்கு பிடிக்காதவர்களோடு இருந்திருக்கிறார்கள். ஆனால் ஈவா, ஹிட்லர் போக சொல்லியும் போகாமல் அவரோடு இறந்து போனாள். சரித்திரம் ஈவாவை "girl in a gilded cage" என தான் அழைக்கிறது. ஹிட்லரோடு அவர் இருந்த வரை ஹிட்லரின் புகைப்படத்தோடு ஏதோ ஒரு படிக்கட்டின் கீழ் அவருக்காக காத்திருப்பதே அவர் வேலையாக கொண்டிருந்தார். 1912 பிப்ரவரி 6 பிறந்த ஈவா ஹிட்லரை சந்தித்தது தன் 17 வயதில். முனிச் நகரில் ஈவா வேலை பார்த்த கடைக்கு ஹிட்லர் 1929 ஆம் ஆண்டு வந்த போது நிகழ்ந்த நிகழ்வு அது. தனது நண்பர்களுக்கு ஹிட்லரை பற்றி ஈவா சொன்னவை, "gentleman of a certain age with a funny moustache, a light-colored English overcoat, and carrying a big felt hat." (தமிழாக்கம் செய்தால் அர்த்தம் மாறக்கூடும் என எண்ணி மாற்றவில்லை).
1931 ஹிட்லருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், "Dear Mr. Hitler, I would like to thank you for the pleasant evening at the theater. It was unforgettable. I shall always be grateful for your friendship. I count the hours until the moment when we shall meet again ..."
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

18 கால்தடங்கள்:
அருமையான கட்டுரை.... ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும்.... காதல் எல்லா பக்கமும் இருக்கும் :)))
தெரிந்துக்கொண்டேன்...ஹிட்லர்& ஈவாவின் காதல் பற்றிய பல தகவல்களை!
\\"gentleman of a certain age with a funny moustache, a light-colored English overcoat, and carrying a big felt hat." (தமிழாக்கம் செய்தால் அர்த்தம் மாறக்கூடும் என எண்ணி மாற்றவில்லை).\
தமிழாக்கம் செய்யாதது...நல்லது!
சிரத்தையெடுத்து நிறைய தகவல்கள் சேகரித்திருக்கிறீர்கள்,
பாராட்டுக்கள் !
//ஜி said...
அருமையான கட்டுரை.... ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும்.... காதல் எல்லா பக்கமும் இருக்கும் :)))//
வாங்க ஜி வாங்க. நானும் இதை எழுதி வைச்சுட்டு என்னடா இதுன்னு யோசிக்கிட்டே தான் இருந்தேன். வகைபடுத்த கூட தெரியலை அதான் சும்மா "பொதுவானவை" னு தமிழ்மணம்-ல போட்டேன். இதுக்கு பேரு தான் கட்டுரையா? நல்லா இருக்கே. நீங்க வேற தெரியாம அருமையா இருக்குன்னு சொல்லிட்டீங்களா இனிமே உரை கட்டுரை தான் போங்க நம்ம பிளாக்ல :)
காதல் நிஜமாக இன்னும் இருக்க இத்தகைய காதலர்களும்(காதலிகளும்) தான் காரணம்.
உங்கள் கட்டுரை அருமை!
differentaana kaadhal pathi solli irukeenga. nala irukkuthu.
natpodu
nivisha
//Divya said...
தெரிந்துக்கொண்டேன்...ஹிட்லர்& ஈவாவின் காதல் பற்றிய பல தகவல்களை!
\\"gentleman of a certain age with a funny moustache, a light-colored English overcoat, and carrying a big felt hat." (தமிழாக்கம் செய்தால் அர்த்தம் மாறக்கூடும் என எண்ணி மாற்றவில்லை).\
தமிழாக்கம் செய்யாதது...நல்லது!
சிரத்தையெடுத்து நிறைய தகவல்கள் சேகரித்திருக்கிறீர்கள்,
பாராட்டுக்கள் !//
நேற்று தான் ஈவாவின் பிறந்தநாள். இது அவர்களுக்காக பதிக்கப்பட்டது. படித்து கருத்து சொன்னதற்கு நன்றி திவ்யா :)
//கோகிலவாணி கார்த்திகேயன் said...
காதல் நிஜமாக இன்னும் இருக்க இத்தகைய காதலர்களும்(காதலிகளும்) தான் காரணம்.
உங்கள் கட்டுரை அருமை!//
உண்மை தான் சகோதரி காதல் உயிர் வாழ்வது இது போன்ற காதலர்களால் தான். வருகைக்கு நன்றி.
ஒருவகையில் ஈவா ஹிட்லர் மேல் கொண்ட காதல் ஹிட்லர் என்ற ஆட்சியாளர் மீது பிரமையால் ஏற்பட்டதாக இருக்கலாம் அல்லவா..
கார்ல்மார்க்ஸ்-ஜென்னி காதல் படித்திருக்கிறீர்களா..?
அதுவும் காதல்தான்.. ஆனால் மதிப்பிட முடியாதது..
//நிவிஷா..... said...
differentaana kaadhal pathi solli irukeenga. nala irukkuthu.
natpodu
nivisha//
காதலே வித்தியாசமான உணர்வு தானே நிவிஷா?
நன்றி
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஒருவகையில் ஈவா ஹிட்லர் மேல் கொண்ட காதல் ஹிட்லர் என்ற ஆட்சியாளர் மீது பிரமையால் ஏற்பட்டதாக இருக்கலாம் அல்லவா..//
வாங்க உண்மை தமிழன்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ஈவா ஒரு அருமையான ஆட்சியாளராக தானே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? ஈவா ஹிட்லரை சந்திந்த போது அவரை வெறுத்தவரே அதிகம். ஹிட்லர் ஈவா காதல் (சரி உறவு என வைத்துக்கொள்வோம்) ஒரு விந்தை தான்.
// கார்ல்மார்க்ஸ்-ஜென்னி காதல் படித்திருக்கிறீர்களா..?
அதுவும் காதல்தான்.. ஆனால் மதிப்பிட முடியாதது..//
கார்ல்மாக்ஸ் காதல் படிக்கவில்லை நண்பரே. படித்துவிடுகிறேன்.
நன்றி.
நீங்கள் உங்கள் முகப்பில் உள்ள துள்ளிக் குதிக்கும் மீனை புகைப்படப் போட்டிக்கு அனுப்பலாமே!
//கோகிலவாணி கார்த்திகேயன் said...
நீங்கள் உங்கள் முகப்பில் உள்ள துள்ளிக் குதிக்கும் மீனை புகைப்படப் போட்டிக்கு அனுப்பலாமே!//
போட்டியா என்ன போட்டி மேடம்?? அப்புறம் அது Blogger Template உடையது. Copy right பிரச்சனைனு உள்ளபுடிச்சி போட்டுவாங்கமா..... :(
Romba nalla eluthi irukinga, intha seriesla inum niraiya kaathalargal pathi eluthunga. Not many ppl know about Eva and Hitler. Your article spoke about them... good job.
regards
Deeksh
//Deekshanya said...
Romba nalla eluthi irukinga, intha seriesla inum niraiya kaathalargal pathi eluthunga. Not many ppl know about Eva and Hitler. Your article spoke about them... good job.
regards
Deeksh//
நன்றி தீக்ஷன்யா. நான் இந்த பதிவை ஒரு சோதனை முயற்சியாக தான் வெளியிட்டேன். ம்ம்ம் நல்ல கருத்துக்கள் வந்தது குறித்து மகிழ்ச்சியே. அடுத்து நண்பர் உண்மை தமிழன் சொன்னது போல கார்ல்மார்க்ஸ்-ஜென்னி காதல் பற்றி கொஞ்சம் தகவல்கள் சேகரித்து வெளியிட முயற்சிக்கிறேன். ஆனால் அந்த தகவல்கள் சேகரிக்க சிறிது காலம் பிடிக்கும். கருத்துக்கு மிக்க நன்றி !!!
சரித்திர நிகழ்வை மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீ ! காதல் நெருப்பு மரணம் தாண்டியும் எரிகிறது தெரிகிறது !!
//நவீன் ப்ரகாஷ் said...
சரித்திர நிகழ்வை மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீ ! காதல் நெருப்பு மரணம் தாண்டியும் எரிகிறது தெரிகிறது !!//
நன்றி கவிஞரே,
ஏதோ ஒரு சின்ன முயற்சி என்னன்னே தெரியாம எழுதினேன் நம்ம ஜி தான் கட்டுரைனு சொல்லிட்டாரு. இதை சில பகுதிகளாக தொடரும் எண்ணமும் இருக்கின்றது. ஒரு வேளை நேரம் இருந்தால் சில காதலர்களை அழகாய் பார்த்து பொறாமைப்படலாம் ;)
நான் முன்பு ஒருமுறை ஹிட்லர் ஈவாவின் காதல் பற்றி படித்ததுண்டு... ஆனால் உங்கள் மொழிநடையும் நீங்கள் அதை சொன்ன விதவும் மிகவும் அருமை... உண்மையிலேயே "ஈவா" ஒரு காதல் தேவதை... உங்கள் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா...
//Elwinston , Dolores Scholastica said...
நான் முன்பு ஒருமுறை ஹிட்லர் ஈவாவின் காதல் பற்றி படித்ததுண்டு... ஆனால் உங்கள் மொழிநடையும் நீங்கள் அதை சொன்ன விதவும் மிகவும் அருமை... உண்மையிலேயே "ஈவா" ஒரு காதல் தேவதை... உங்கள் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா...//
அப்படியா டோலோரஸ்? உங்களையும் ஹிட்லர்-ஈவா காதல் கவர்ந்ததில் மகிழ்ச்சியே! வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சகோ.
Post a Comment