விளக்கம்: தீக்காயம் கூட ஆறிவிடும் ஆனால் காதலியின் முத்த வடுக்கள் ஆறாது. அந்த வடுக்களே காதலின் சின்னம்.
விளக்கம்: மழையை எதிர்நோக்கியே இந்த உலகம் வாழ்வது போல் என்னவளின் கண்ணை நோக்கியே வாழ்ந்து பழகிவிட்டேன்.
விளக்கம்: மயிர் நீங்கிவிடின் வீழ்ந்து மடியும் கவரிமான் போல உண்மைக் காதலர்கள் உயிர் நீப்பர் காதலுக்காக.
விளக்கம்: எப்படி இந்த உலகம் காதல் இன்றி அமையாதோ அதே போல் அவள் இல்லாமல் என் உலகமும் அமையாது.
விளக்கம்: காதலோடு பிறப்பதே நன்று அப்படி இல்லாதார் பிறக்காமல் இருப்பதே மேல்.
விளக்கம்: காதல் செய்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
விளக்கம்: நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் காதல் வேண்டும்.
விளக்கம்: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து கட்டியணைக்க காதல் பெருகிக் கொண்டே இருக்கும்.
விளக்கம்: காதலித்தே சிலர் வாழவேண்டும் என்று கடவுள் முடிவு செய்து இருந்தால், அக்கடவுளும் காதலனைப் போல் அலைந்து திரிந்து வருந்த வேண்டும்.
விளக்கம்: மந்திர ஜாலம் செய்து நெருப்பின் நடுவில் ஒருவன் தைரியமாய்ப் படுத்துறங்கலாம்; காதல் வந்தபோது கண்மூடி ஒருவனால் உறங்க முடியாது.
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
காதல் பால்
Subscribe to:
Post Comments (Atom)
10 கால்தடங்கள்:
Hi Sri,
Most of them are good friend. Nice creative thinking. My wishes.
// Anonymous said...
Hi Sri,
Most of them are good friend. Nice creative thinking. My wishes.//
நண்பரே வந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி!!! பெயராவது சொல்லி இருக்கலாமே நீங்க :)
குறளும் விளக்கமும் அருமை,
படங்களின் தேர்வு.....கவர்ந்தது!
// Divya said...
குறளும் விளக்கமும் அருமை,
படங்களின் தேர்வு.....கவர்ந்தது!//
வாங்க திவ்யா, குறள் ஏற்கனவே இருந்தது தானே ஆல்டரேசன் கொஞ்சம் சுலபமான விஷயம் தான். கருத்துக்கு நன்றீங்கோ.....
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா!! இன்னொரு காதல் கவிஞரா? வாழ்த்துக்கள் :-)
//சேதுக்கரசி said...
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா!! இன்னொரு காதல் கவிஞரா? வாழ்த்துக்கள் :-)//
ஆஹா!!!! வாங்க சேதுக்கரசி வாங்க. வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி. காதல் கவிஞரா? நானா?. வேணும்னா குட்டி கவிஞரா இருந்துட்டு போறேனே :). மறுபடியும் வரலாம் தப்பில்லை :D. நன்றி.
summa nacchu nu irukku :)
//King Vishy said...
summa nacchu nu irukku :)//
ஹி ஹி என்னங்க விளம்பர படம்ல வரா மாதிரி பின்னூட்டம் போட்டிருக்கீங்க. நன்றி :)
ஸ்ரீ !! :))
காதல் பால் மிகவும் ரசித்தேன்....
குறிப்பாக...
கட்டியணைத்தூறும் காதல் – குறும்பு கூத்தாடுகிறது
அவளின்றி அமையாது ஒழுக்கு - அப்படியா ??
அழகான படங்களும் வரிகளும் காதலன் காதலிபோல அழகோ அழகு..
//நவீன் ப்ரகாஷ் said...
ஸ்ரீ !! :))
காதல் பால் மிகவும் ரசித்தேன்....//
தல வாங்க தல சின்ன பையன் வ்லைப்பூக்கு வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி!!
//குறிப்பாக...
கட்டியணைத்தூறும் காதல் – குறும்பு கூத்தாடுகிறது //
எல்லாம் உங்க கிட்ட இருந்து தொற்றிக்கொண்டது தான் ;)
//அவளின்றி அமையாது ஒழுக்கு - அப்படியா ??//
என்ன பண்றது அப்போ அப்போ கேப்புள கடா வெட்டணுமே. உங்களுக்கு தெரியாததா??
//அழகான படங்களும் வரிகளும் காதலன் காதலி போல அழகோ அழகு..//
சுருக்கமாக காதல் போல் அழகு என வைத்துக்கொள்ளலாமா? :D
நன்றி!!
Post a Comment