ஸ்ரீயாகிய நான் 4 ஆஹா இவன் அவன் இல்லை

ஸ்ரீயாகிய நான் 1

ரொம்ப நாள் கழிச்சு சொந்த கதை எழுதலாம்னு உக்காந்தா ஒன்னுமே தோணமாட்டேங்குது. என்னடா இது இருக்குற எல்லா டுபாக்கூர் வேலையும் பண்ணோமே ஆனா எதுவுமே நினைவுக்கு வரலையே அப்டின்னு ஒரே பீலிங்ஸா போச்சு. ஆஃபீஸ்ல மானாவாரியா வேலை செஞ்சி எல்லாம் மறந்து போச்சுப்பான்னு நானே ஒரு பொய்ய சொல்லி என்னையே சமாதானப்படுத்திக்கிட்டு இருந்த நேரம் தான் இந்த விஷயம் ஸ்ரைக் ஆச்சு.

ஏற்கனவே சொன்னா மாதிரி நான் ஒரு சூப்பரான ஸ்கூல்ல சுமாரா படிச்சிக்கிட்டு (நம்பித்தான் ஆகணும் வேற வழி இல்லை ஏன்னா கதை சொல்றது நானு) இருந்தேன். அங்க எல்லாத்தையும் படிச்சி கிழிச்சிட்டு காலேஜை பாக்க போயிட்டேன். அம்மா அடிக்கடி ஒன்னு சொல்லுவாங்க "டேய் புது தொடப்பம் நல்லாத் தான் பெருக்கும்"னு. அது என்னன்னா முதல்ல ஏதாவது ஆரம்பிக்கும் போது நல்லா இருக்கும் ஆனா போக போக எல்லா ஆர்வமும் போயிடும்னு அர்த்தம். அதே மாதிரி தான் காலேஜ் சேர்ந்த உடனே ஆர்வக்கோளாறுல ஏதோ படிச்சு கிளாச்ல 2வது மார்க் வாங்கிட்டேன் செமஸ்டர்ல (அட இது உண்மை உண்மை உண்மை). அங்க தான் ஆரம்பிச்சது பிரச்சனையே. அப்போ எவனும் எதுவும் கண்டுக்கலை, 2வது செமஸ்டர் பிராக்டிக்கல்ஸ்-ல 'வைவா'க்கு போனேங்க. நாம தான் தருமியாச்சே கேக்கதான் தெரியும் அதுல பதில் சொல்லணுமாம். பசங்க எந்த கேள்வி கேட்டாலும் 'நோ ஐடியா'னு சொல்ல சொன்னாங்க. நானும் சரி 'நோ ஐடியா' அப்டின்னு அதை மட்டும் மனப்பாடம் செஞ்சிட்டு போனேன்.

அன்னிக்கு வந்திருந்த வாத்திக்கும் எனக்கும் எப்பவுமே மாமன் மச்சான் விளையாட்டு தான் நடக்கும். ஏன்னா அவர் என்னை விட படிப்புல கொஞ்சம் வீக்கு :). "Carpentry" அப்டின்னு ஒரு பிராக்டிக்கல் எக்ஸாம். அட அது அழகா இருக்குற கட்டையை நோண்டி ஓட்டை போட்டு கேவலமாக்குற ஒரு வெளாட்டு (பண்ண தெரியாது இப்படி தான் சொல்லணும், ஏன்னா நான் அதை தான் பண்ணுவேன்). நீங்களே சொல்லுங்க இந்த ஓட்டை போடுற கருமத்துக்கு எதுக்குங்க வைவா? ஒரு வழியா குடுத்த கட்டைய சிம்ரன் மாதிரி ஒரு ஷேப்புல செதுக்கினேன். ஆனா நான் பண்ணதுக்கும் அவங்க பண்ண சொன்னதுக்கும் சம்மந்தமே இல்லை அது வேற விஷயம் :) (நமக்கு சிம்ரன் தான முக்கியம்). அதை எடுத்துக்கிட்டு நெஞ்ச நிமுத்திக்கிட்டு போனேன் வைவாக்கு. மன்னன் படத்துல கவுண்டமணி கேப்பாரே "இந்த ஓட்டை கண்ணாடிய போட்டுக்கிட்டு கூட்டத்து முன்னாடி நிக்குறியே உனக்கு இருந்தாலும் ரொம்ப தான் பா தைரியம்" அதே மாதிரி கூட இருந்தவன் எல்லாம் கிண்டல் பண்ணாலும் ஆனது ஆகட்டும்னு போனேன். அங்க போய் பாத்தாதான் தெரியுது நம்ம மாமு இருக்குற விஷயமே. வயித்துல லைட்டா புளிய கரைச்சா மாதிரி இருந்தாலும் அதெல்லாம் காட்டிக்காம கொண்டு போன சிம்ரனை அவரு கையில குடுத்தேன். அதை சிரிச்சிக்கிட்டே வாங்கி மத்தவங்க பண்ணது கூட வைக்கும் போது தான் தெரிஞ்சிது அந்த கூட்டத்துலயே என்னோடது மட்டும் சொறி நாய் மாதிரி தனியா தெரிஞ்சது :(.

மாமு அதுக்கு அப்புறம் பேச ஆரம்பிச்சவர் (எதுக்கும் அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்டினே போடுவோம் எதுக்கு வம்பு?) தான். டிசைன் டிசைன் னா அசிங்கப்படுத்துனார் நான் பண்ண சிம்ரனை. நாம தான் கொட்டுற மழைல கொய்யா தின்னுறவங்களாச்சே. "மாமு நீ என்ன தான் சொல்றியோ சொல்லிக்கோ"ன்னு சிரிச்சிக்கிட்டே இருந்தேன் (வெளியில தான் சிரிச்சேன் ஆனா உள்ளுக்குள்ள.....). அவர் செம வெறி ஆயிட்டார் இரு டா வைவா கேக்குறேன்னு சொல்லிட்டு , "நீ தான் 2nd மார்க்காமே போன செம்ல, எதுல அதிகமா மார்க் வாங்குன"ன்னு ஆரம்பிச்சார். நான் தான் வெகுளியாச்சே, "எலக்ட்ரிக்கல்ஸ் சார்"னு சொன்னேன். பசங்க சொல்லி குடுத்த 'நோ ஐடியா'னே சொல்லி இருக்கலாம். அதை கேட்ட உடனே என்னா சந்தோசம் மாமு மூஞ்சில 'மாட்டுனான் டா' ன்னு நெனச்சார் போல.

மொதல் கேள்வியா "வீட்டுல என்ன யூஸ் பண்றோம் ஏ.சியா? டி.சியா? (Alternate.Current or Direct.Current)"னு கேட்டார். அதை நான் சுத்தமா எதிர்பாக்கலை ஏன்னா அவரு ஒரு மெக்கானிக் (அதாங்க மெக்கானிக்கல் இஞ்சி). நான் சுதாரிச்சிக்கிட்டு "மாமு உனக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்குன்னு" மனசுக்குள்ளயே நினைச்சுக்கிட்டு கொஞ்சம் திங்கிங் பண்ணேன். ஏ.சினா பல்பு ஆஃப் ஆகி ஆன் ஆகும், டி.சினா தான் தொடர்ந்து எரியும்னு உள்ளுக்குள்ள இருந்த அயின்ஸ்டீன் மையில்டு வாய்ஸ்ல க்ளூ குடுத்தார். அப்புறம் தட்டுத்தடு மாறி "டி.சி" அப்டின்னு அழகா தப்பா சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் நான் என்னத்த சொல்ல? கலர் கலரா கலாய்ச்சார். கொஞ்சம் கேப்பு விட்டு மறுபடியும் "மிக்ஸி எப்படி வேலை செய்யுது?"ன்னு ரெண்டாவது கேள்வியை கேட்டு தொலைச்சுட்டாரு. நான் அட இது ஈசிடா மச்சின்னு நினைச்சிக்கிட்டு, "சார் பிளக் போட்டு சுச்ச போட்டா மோட்டர் சுத்தும் சார் அப்டியே சட்னி அரைச்சிடும் சார்"னு கொஞ்சம் அப்பாவியா சொல்லிட்டேன். அது வரைக்கும் சிரிச்சிக்கிட்டு இருந்தவர் என்னை கடிக்காத குறையா பாத்தார் அதுக்கு அப்புறம் தான் "மாப்பிளை இது கூட தப்பு போல டா உசாரு!!!"ன்னு உள்ள இருந்த பட்சி சொல்லுச்சு. "சார் நான் உங்களை கேட்டதே அந்த மோட்டர் எப்படி சுத்தும்னு தான்" இப்படி ஒரு ரிப்ளை வர. "இனிமே எல்லாத்தையும் மூடிக்கிட்டு அமைதியாவே இருடா"ன்னு மறுபடி பட்சி கத்துச்சு. அதுக்கு அப்புறம் வாயே தொறக்கலை. ஆத்து ஆத்துன்னு ஆத்துனார் சொற்பொழிவை, சிரிச்சிக்கிட்டே எல்லாத்தையும் கேட்டுட்டு வெளியில கிளம்புர நேரம் பாத்து "அடுத்த வருஷம் வந்து மறுபடி எழுது செல்லம்"னு சொல்லி அனுப்பிட்டார்.

ரூமுக்கு வந்து டிப்ளமா பையன் கிட்ட தான் வீட்டுல ஏ.சி யூஸ் பண்றோம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அவன் தான் 50Hz சப்ளை அப்டின்னா ஒரு எல்.இ.டி(LED) ஒரு நொடிக்கு 50 முறை ஆஃப் ஆகி ஆன் ஆகும்னு சொன்னான் (கொஞ்சம் இன்சினியர் எல்லாரும் நெஞ்சுல கைய வெச்சு சொல்லுங்க இந்த மேட்டர் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?, இப்போ 60Hz யூஸ் பண்றாங்க வெளிநாட்டில்). "மச்சி அது தெரியும் டா சும்மா நம்ம மாமு கூட வெளாடி ரொம்ப நாள் ஆச்சு இல்லை அதான்". இந்த பொய்ய சொல்லித்தான் 2வது வருஷம் முழுசா ஓட்டுனேன். அடுத்தவன் அசிங்கப்பட்டா நம்ம பசங்க ரொம்ப நாளைக்கு நியாபகத்துல வெச்சிருக்கானுங்கய்யா. இதை அவனுங்க மறக்க இதே மாதிரி நிறைய விஷயம் பண்ண வேண்டியதா போச்சுங்க. அதெல்லாம் அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு இந்த மொக்கை போதும்னு நினைக்குறேன். :)

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

12 கால்தடங்கள்:

அனுசுயா said...

நிசமாலுமே நொடிக்கு 50 தடவை ஆப் ஆகி எரியுதா?

இதுக்கு முன்னாடி இந்த மேட்டர கேள்வி பட்டதே இல்லியே :(

ஸ்ரீ said...

//அனுசுயா said...

நிசமாலுமே நொடிக்கு 50 தடவை ஆப் ஆகி எரியுதா?

இதுக்கு முன்னாடி இந்த மேட்டர கேள்வி பட்டதே இல்லியே :(//

சாரிங்க கொஞ்சம் திருத்தம் டியூப் லைட்டுன்னு அவசரத்துல போட்டுட்டேன். ஆனா ஒரு எல்.இ.டி லைட்டுல அது தெரியுமாம் அவ்ளோ பெறிய ஆராய்ச்சிலாம் எதுக்கு பண்ணிக்கிட்டு.

மேடம் நானும் நீங்க கேட்டா மாதிரி தான் அவன் கிட்டையும் கேட்டேன் அவன், "எனக்கு தெரிஞ்சி எங்க அப்பத்தா மேல ஆணையா அப்படித்தான் டா எரியுது"னு சொன்னான் :). ஆஹா பாத்தீங்களா நீங்களே கேள்வி பட்டது இல்லைனா நான் பாவம் கொழந்தை :(. நன்றீங்கோ வந்ததுக்கு....

King Vishy said...

:D

too good.. came here cos my friend "Neo... the one" gave me this link.. u made my day!! :D

ஸ்ரீ said...

//King Vishy said...

:D

too good.. came here cos my friend "Neo... the one" gave me this link.. u made my day!! :D//

வாங்க கிங் விஸி (சாரி முதல் முறை படிக்கும் போது கிங் விஸ்கி-னு படிச்சிட்டு அப்படி கூட ஒரு பிராண்டானு யோசிட்டேன் :)) எப்படி வந்தா என்ன பிரதர் வந்ததற்கு முதலில் என் நன்றி. அடிக்கடி வாங்க இதே மாதிரி நிறைய நடந்திருக்கு அப்போ அப்போ சொல்றேன். அடுத்த பதிவு பிப்ரவரி 14.

ச.பிரேம்குமார் said...

ஸ்ஸ்ஸ்ஸ்........ முடியல

ஸ்ரீ said...

//பிரேம்குமார் said...

ஸ்ஸ்ஸ்ஸ்........ முடியல//

ஹி ஹி உங்களாலயே முடியலைனா பாவம் நான் சின்ன பையன் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்னு கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க சித்து :D

நிவிஷா..... said...

நல்லா தான் கலாய்ச்சி இருக்கீங்க ...

thanks for coming by my blog..
posted a new post. do come by

நட்போடு
நிவிஷா

Dreamzz said...

முதல்ல கைய குடுங்க.. இதே தான் எனக்கும் ஆச்சு.. ஆன என் வாத்தி நல்ல மனசு பன்னி என்க்கு ஜஸ்ட் பாஸ் போட்டு விட்டார் :)

ஒரு வேளை இவருக்கு சிம்ரன் பிடிக்குமோ??? ;)

ஸ்ரீ said...

//நிவிஷா..... said...

நல்லா தான் கலாய்ச்சி இருக்கீங்க ...

thanks for coming by my blog..
posted a new post. do come by

நட்போடு
நிவிஷா//

நல்லா கலாய்ச்சிருக்கேனா? அவங்க தானுங்க என்னை கலாய்ச்சிட்டானுங்க :(

ஸ்ரீ said...

//Dreamzz said...

முதல்ல கைய குடுங்க.. இதே தான் எனக்கும் ஆச்சு.. ஆன என் வாத்தி நல்ல மனசு பன்னி என்க்கு ஜஸ்ட் பாஸ் போட்டு விட்டார் :)

ஒரு வேளை இவருக்கு சிம்ரன் பிடிக்குமோ??? ;)//

//**என் வாத்தி நல்ல மனசு பன்னி**//

என்னங்க இது டிரீம்ஸ் என்ன தான் வாத்தி மேல கோவம் இருந்தாலும் இப்படியா திட்டுவீங்க :D. என்னையும் பாஸ் பண்ணிட்டாரு ஆனா நமக்குன்னு ஒரு கெத்து இருக்கு இல்லை அது அன்னிக்கு செத்து போச்சு. ஆஹா "கெத்து செத்து" பாத்தீங்களா கவிதை கவிதை :)

//** ஒரு வேளை இவருக்கு சிம்ரன் பிடிக்குமோ??? ;) **//

அது எனக்கு தெரியாது பாஸ் ஆனா என்னை பிடிக்காது அவருக்கு. நாம என்னை சும்மாவா எனக்கும் அவரை பிடிக்காது :P

Anonymous said...

Inda chinna vayasula unaku immutu kastama da...
< Mumtaj >Ayoooooooo pavammm< / Mumtaj >

ஸ்ரீ said...

//Alagesh said...

Inda chinna vayasula unaku immutu kastama da...
< Mumtaj >Ayoooooooo pavammm< / Mumtaj >//

வாங்க அல்கேட்ஸ்,
படிச்சதுக்கு நன்றி.

// Inda chinna vayasula unaku immutu kastama da...//

என்னங்க பண்றது வாழ்க்கையில மானாவாரியா கஷ்டம் வந்தாலும் அதெல்லாம் ஏதோ டீலிங்க்ஸ் பண்ணி தேத்திகிட்டு இருக்கேன்.

//< Mumtaj >Ayoooooooo pavammm< / Mumtaj >//

என்னப்பா இது? "மும்தாஜ்"னு ஒரு HTML Tag இருக்கா? எனக்கு இவ்ளோ காலமா தெரியாம போச்சே :)