ஒரு வழியா கடைசியா புது தளம் தொடங்கியாச்சுங்க.
தள முகவரி - http://ottraiandril.com
புகழனுக்கு என் நன்றிகள். போன பதிவில் அவர் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால், இது என்னும் பல நாட்கள் எடுத்திருக்கும். ஏதோ ஒரு சின்ன சோம்பேறித்தனம் இருந்தது. அதை கொஞ்சம் விரட்டிவிட்டு போன வார இறுதியில் எல்லா வேலைகளையும் முடிச்சிட்டேன்.
அருட்பெங்கோவின் இந்த பதிவு ரொம்ப உதவியா இருந்தது. அவர் முன்னமே சொன்னதால தலைப்புகளில் இருந்த சிறப்பு குறிகள் நீக்கிவிட்டு தான் மாற்றம் செய்தேன். எல்லா பதிவும் இதற்கு மாறிவிட்டது மகிழ்ச்சி தான் ஆனால் 10 பின்னூட்டங்கள் காணவில்லை :).
வேர்ட்பிரஸ் நிறுவிய பின்னர் தளத்தில் தமிழில் இருந்த வார்த்தைகள் வெறும் கேள்விக்குறிகளாக தெரிந்தன. சரி தான். இந்த தளமே ஒரு கேள்விக்குறி ஆகிவிடுமோ என எண்ணி கோவுக்கு தொலைபேசி செய்தேன். அவர் Database Table-களில் உபயோகித்த Collation என்கிற பகுதியை Latin-ல் இருந்து UTF8 Unicode ஆக மாற்ற சொன்னார். அதற்கு பின் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மாற்றம் முடிந்தது.
அப்பாடா கவுஜை போடலடான்னு சந்தோஷ படுறீங்களா? புது தளத்தில் போட்டிருக்கேன் :)
Over to ottraiandril.com
காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.
புதன், மே 21, 2008
ஒற்றை அன்றில் - வேர்ட்பிரஸ் மாற்றம்
கிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 10:26
Subscribe to:
Post Comments (Atom)
3 கால்தடங்கள்:
அப்பாடா...... இனி தொலைந்தோம்..டா
இந்த மனுஷன் கவிதையா எழுதி தள்ள போறாரு..
மஹா ஜனங்களே... கேட்டுக்குங்க.. நல்லா...
எங்க அண்ணன்.. இணைய தளம் ஆரமிச்சிடார்..
ஆரமிச்சிட்டுதுடா.. தலைவலி... ஹா..ஹா..ஹா..
மகாராஜா நான் உங்க அண்ணனா? நீங்க தான் அண்ணன் நான் உங்க கடைசி தம்பி.
தளம் எல்லாம் ஆரம்பிச்சாச்சு ஆனா எழுத தான் சரக்கு இல்லை :(
என்ன ஸ்ரீ!
இந்தப் பதிவை தமிழ்மணத்தில் வகைப்படுத்தி அனுப்பும் போது அனுபவம் நிகழ்வுகள் என்று கொடுத்துள்ளீர்களே!
பதிவர் வட்டம் என்று கொடுத்திருக்கலாம்.
புதுத் தளத்தைப் பார்வையிட்டேன்.
வாழ்த்துக்கள்.
Post a Comment