காதல்
விஷ மாத்திரையா?
விஷம மாத்திரையா?
*
பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.
*
நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.
*
சிறுவயது புகைப்படத்தில்
தூணுக்கு பின் நீ,
உனக்கு நாவல் பழம் எடுத்து வந்த
துருவேறிய என் வடிவியல் பெட்டி*,
பார்
காதலும்
தூணிலும் இருக்கும்,
துரும்பிலும் இருக்கும்.
*
புது மழையில்
கைகள் விரித்தபடி
கண்கள் மூடி
மகிழ்ந்தாயே!
அன்று தான்
சிலுவையில் அறைந்த
இயேசு சிரித்துப்பார்த்தேன்.
*வடிவியல் பெட்டி - Geometry Box.
(புது கூடு கட்டிக்கிட்டு இருக்கேன். இது தான் இந்த தளத்தில் கடைசி பதிவாய் இருக்கும் என நினைக்கிறேன். எல்லா புதன்கிழமையும் பதிவு போட்டு வந்ததால் இந்த வாரம் விடுபட்டுவிடக்கூடாதென கைக்கு வந்த கவுஜைகளை கிறுக்கி இருக்கேன். பொறுத்தருளவும் :). புது கூட்டில் சந்திப்போம்.)
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.
புதன், மே 7, 2008
தூணிலும் காதல் துரும்பிலும் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
19 கால்தடங்கள்:
அவசரத்தில் கிறுக்கிய கவிதையும் நல்லாவே இருக்குது!!
\நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.\
நல்லாயிருக்கு இந்த வரிகள்!!
புது வலைதளம் தொடங்கி இருக்கிறீங்களா ஸ்ரீ??
//
பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்து போனாய்.
//
நல்லாயிருக்கு கவிதை
//
புது கூடு கட்டிக்கிட்டு இருக்கேன். இது தான் இந்த தளத்தில் கடைசி பதிவாய் இருக்கும் என நினைக்கிறேன்
//
புதிய கூட்டின் முகவரியைக் கூறும் பதிவுதான் கடைசிப் பதிவாய் இருக்கும் என நினைக்கிறோம்.
விரைவில் புதுமைகளை எதிர்பார்தது
உங்கள் புகழன்.
kavithai is super!
//நீ
ஒவ்வொறு முறை சிரிக்கும் போது,
அகராதியில்
அழகென்ற வார்த்தையின் அர்த்தம்
இன்னும் அழகாய்
திருத்தி எழுதப்படுகின்றது.//
excellent lines. really enjoyed reading ur poem. keep rocking!!
machi.. chancey illada.. especially the second one. .
vidaikudkaamal vina kuduthal yendraye... class !!
//பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.//
Good one..
I like this...
Senthil,
Bangalore
\\சிறுவயது புகைப்படத்தில்
தூணுக்கு பின் நீ,
உனக்கு நாவல் பழம் எடுத்து வந்த
துருவேறிய என் வடிவியல் பெட்டி*,
பார்
காதலும்
தூணிலும் இருக்கும்,
துரும்பிலும் இருக்கும்.\\\
சூப்பரு..ராசா..;)
புது வலைதளத்தை பத்தி தகவல் கொடு ராசா ;)
//பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்துப் போனாய்.//
அழுத்தம் ஸ்ரீ!
கவிதைகள் வழக்கம் போல் அழகு :)
//பிரியும் போது
நீ மட்டும் தானடி
விடைகொடுக்காமல்
வினாகொடுத்து போனாய்.//
very very nice lines.......!!
enjoyed......!!
ella kavithaium super Sri..!! :-)
// Divya said...
அவசரத்தில் கிறுக்கிய கவிதையும் நல்லாவே இருக்குது!!//
அப்படியா நன்றிங்கக்கா.
//புது வலைதளம் தொடங்கி இருக்கிறீங்களா ஸ்ரீ??//
ஆமாம் திவ்யா. இன்னும் முழுமையாக எதும் செய்யாமல் கிடக்கிறது. அநேகமாக அடுத்த புதன் இயங்க ஆரம்பித்துவிடும் என நினைக்கிறேன். முடிகிறதா என பார்ப்போம் :)
//புகழன் said...
நல்லாயிருக்கு கவிதை //
அப்பாடா இந்த முறையாவது புரிந்துவிட்டதே! ;).
//புதிய கூட்டின் முகவரியைக் கூறும் பதிவுதான் கடைசிப் பதிவாய் இருக்கும் என நினைக்கிறோம்.//
ஆஹா நீங்க கரெக்டா கேள்வி கேட்டுடுறீங்களே! அது வெறும் தகவல் பதிவாக தான் இருக்கும் என நினைத்தேன் அதனால் தான் இதை கடைசி பதிவு என எழுதினேன்.
//விரைவில் புதுமைகளை எதிர்பார்தது
உங்கள் புகழன்.//
கண்டிப்பாக என்னால் முடிந்தவரை புதுமை தர முயற்சிக்கிறேன். நன்றி.
//Thamizhmaangani said...
kavithai is super!
excellent lines. really enjoyed reading ur poem. keep rocking!!//
தமிழ்மாங்கனி ரொம்ப நன்றிங்க வாசித்து பின்னூட்டமிட்டமைக்கு :)
// Neo.... the One said...
machi.. chancey illada.. especially the second one. .
vidaikudkaamal vina kuduthal yendraye... class !!//
நன்றி ஹை மாப்ள. அப்போ அப்போ வா ராசா. ரொம்ப நாள் ஆச்சு போல வந்து. Classa எத்தனாங் கிளாசு? ;)
//Sen22 said...
Good one..
I like this...
Senthil,
Bangalore//
வாங்க செந்தில். நம்மூரு தானா நீங்க? நன்றிங்க செந்தில்.
// கோபிநாத் said...
சூப்பரு..ராசா..;)//
வெரி குட் அண்ணாத்த. எப்பவும் எனக்கு பிடித்த ஒரு கவிதை இருக்கும் ஆனா படிக்கும் எல்லோரும் அதை விட்டுவிட்டு நான் இடத்தை நிரப்ப எழுதிய கவிதை தான் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க :(. எப்பவுமே நீங்க தான் அதை சரியா சொல்றீங்க. நாம் ஒரே அலைவரிசையில் இருக்கோம்.
// புது வலைதளத்தை பத்தி தகவல் கொடு ராசா ;)//
இன்னும் அது முழுமையாக இயங்கவில்லை அண்ணேன். அதுக்கு ஒரு பதிவு போடுறேன். :)
// sathish said...
அழுத்தம் ஸ்ரீ!
கவிதைகள் வழக்கம் போல் அழகு :)//
நன்றி தல :)
// Sri said...
very very nice lines.......!!
enjoyed......!!
ella kavithaium super Sri..!! :-)//
அப்படியா ஸ்ரீ ரொம்ப நன்றிங்க வந்ததுக்கு.
avasarathula kirukunaalum attakaasamaa irukuthu :)))
//ஜி said...
avasarathula kirukunaalum attakaasamaa irukuthu :)))//
எல்லாம் உங்க பயிற்சி தான் ஜி. என்ன உங்க சிஷ்ய புள்ள ஓகேவா. தேரிட்டானா?
//புது மழையில்
கைகள் விரித்தபடி
கண்கள் மூடி
மகிழ்ந்தாயே!
அன்று தான்
சிலுவையில் அறைந்த
இயேசு சிரித்துப்பார்த்தேன்.//
ஐயோ.. முடியலடா சாமி...
இது எல்லாம் எங்க இருந்து வருமோ...
புதுசு புதுசா யோசிபீங்களோ ?
Post a Comment