கள்ளூறியவள்




என் கல்லூரியில்
புதிதாய் சேர்ந்த
‘கள்ளூறி’யவள்
நீ!

#

நீ
கல்லூரிக்கு வராத நாட்கள்
விடுமுறை தினங்கள்
காதலுக்கு.

#

நீயே கல்லூரியாய்ப் போக,
கழுத்தோர மச்சம் கரும்பலகையாக,
எப்போது தொடங்கப் போகிறாய்
காதல் பாடத்தை?

#

‘குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.

#

வேடிக்கையும், விளையாட்டும்
நிறைந்த கல்லூரி வாழ்க்கையில்
உன் வேடிக்கையால்
என் மனதோடு விளையாடினாயே!
நினைவிருக்கா?

#

ஆளில்லாத வகுப்பில்
என் பிறந்த நாளுக்கு
நீ முத்தம் தர
வெட்கத்தில்
சிவந்த கரும்பலகைக்கு
இந்நேரம்
வர்ணம் தீட்டியிருப்பார்களா?

#

டேய் தம்பி நீயும் புது வலை தொடங்குறதா போன பதிவுல இருந்து சொல்லிக்கிட்டு வர ஆனா ஒன்னுமே பண்ணாம இருக்க அப்டின்னு கேக்குறீங்க. புரியுது. நம்ம கையில என்னங்க இருக்கு எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பாத்துக்குவான் :). என்னங்க பண்ண? கிழமையும் ஞாபகத்துல இருக்கறது இல்லை. புதன் கிழமை ஆச்சே ஏதாவது பதிவு இருக்கான்னு யாராவது கேட்டா தான் கவுஜை எழுத கலப்பையை தேடுறேன் (எப்போ நீ கவுஜை எழுதுனன்னு கேட்டீங்கன்னா மேல இருக்கறது எல்லாம் சத்தியமா கவுஜை தானுங்க). ஏன்னா நாங்க அவ்ளோ பிசி (நம்புங்கோ நம்புங்கோ).

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

20 கால்தடங்கள்:

Sen22 said...

//நீ
கல்லூரிக்கு வராத நாட்கள்
விடுமுறை தினங்கள்
காதலுக்கு.//

//குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.//


ரசனையான வரிகள்...



Senthil,
Bangalore

புகழன் said...

\\டேய் தம்பி நீயும் புது வலை தொடங்குறதா போன பதிவுல இருந்து சொல்லிக்கிட்டு வர ஆனா ஒன்னுமே பண்ணாம இருக்க அப்டின்னு கேக்குறீங்க. புரியுது.\\

இது எனக்கு முன்னவே தெரிஞ்சதனாலதான் அப்பவே ஒரு மறுப்பு போட்டுட்டேன்.

சரி சரி மன்னிச்சு விட்டுருவோம்.
ஆனா கவுஜ எழுதுனா மன்னிக்கனும்னு நினைச்சாலும் முடியாதுபோல

புகழன் said...

//‘குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.
//
தப்பு பண்ணிட்டு இப்படி ஒருசாக்குபோக்கா?

புகழன் said...

//ஆளில்லாத வகுப்பில்
என் பிறந்த நாளுக்கு
நீ முத்தம் தர
வெட்கத்தில்
சிவந்த கரும்பலகைக்கு
இந்நேரம்
வர்ணம் தீட்டியிருப்பார்களா?
//

பதிலுக்கு நீ கொடுத்த முத்தத்தில் மீண்டும் கரும்பலகை கருத்து விட்டதாம்.

புகழன் said...

//புதன் கிழமை ஆச்சே ஏதாவது பதிவு இருக்கான்னு யாராவது கேட்டா தான் கவுஜை எழுத கலப்பையை தேடுறேன்
//

உங்ககிட்ட கவிதை எழுதச் சொல்லி இப்ப யாரு கேட்டா?

ஏன் இந்தக் கொடுமை?

ஸ்ரீ said...

//Sen22 said...

//நீ
கல்லூரிக்கு வராத நாட்கள்
விடுமுறை தினங்கள்
காதலுக்கு.//

//குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.//


ரசனையான வரிகள்...

Senthil,
Bangalore//

ரொம்ப நன்றி ஹை செந்தில் சார்.

ஸ்ரீ said...

//புகழன் said...

இது எனக்கு முன்னவே தெரிஞ்சதனாலதான் அப்பவே ஒரு மறுப்பு போட்டுட்டேன்.//

ஆமாங்க புகழன் நீங்க முக்காலமும் உணர்ந்திருக்கீங்க தல.

// சரி சரி மன்னிச்சு விட்டுருவோம்.
ஆனா கவுஜ எழுதுனா மன்னிக்கனும்னு நினைச்சாலும் முடியாதுபோல//

ஹா ஹா அதெப்படி உங்க எல்லாறயும் நிம்மதியா இருக்க விட்டுடுவேனா?

//தப்பு பண்ணிட்டு இப்படி ஒருசாக்குபோக்கா?//

என்னங்க செய்ய அப்படியாச்சும் காதலி கிட்ட அடிவாங்கலாமே. எல்லாம் ஒரு ரொமான்சு ட்ரிக்கு ;)

//பதிலுக்கு நீ கொடுத்த முத்தத்தில் மீண்டும் கரும்பலகை கருத்து விட்டதாம்.//

ஆஹா தல ஏன் இந்த கொலைவெறி? எல்லாம் வெறும் கற்பனையே! மாயா சாயா (அவங்க ரெண்டு பேரும் யாருன்னு கேக்காதீங்க).

//உங்ககிட்ட கவிதை எழுதச் சொல்லி இப்ப யாரு கேட்டா?

ஏன் இந்தக் கொடுமை?//

ணா போங்கண்ணா. இருந்தாலும் என்ன ரொம்பத் தான் புகழுறீங்க :D

நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ....

" கள்ளூரியவள் " - பேரே சும்மா
போதை ஏற்றுகிறதே... கவிதைகள்
அதைவிட.....:)))) வாழ்த்துக்கள் :)))

Aruna said...

பாடம் எப்போதான் படித்தீங்க shree??
அன்புடன் அருணா

Sri said...

வழக்கம் போல கவிதை நல்லா இருந்தது.......! :-)

//‘குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.//

கல்லூரிக்கு போன பிறகு கூடவா குட்டு வாங்கி படிச்சீங்க....? ;-)

ஸ்ரீ said...

//நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ....

" கள்ளூரியவள் " - பேரே சும்மா
போதை ஏற்றுகிறதே... கவிதைகள்
அதைவிட.....:)))) வாழ்த்துக்கள் :)))//

அப்டீங்களா ணா நன்றிணோவ் ;)

ஸ்ரீ said...

// aruna said...

பாடம் எப்போதான் படித்தீங்க shree??
அன்புடன் அருணா//

யக்கா நீங்களுமா? :(

"காதலிக்க நேரமில்லை. காதலிப்பார் யாருமில்லை...." அட இதுக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சும்மா பாடுவேன் :D

ஸ்ரீ said...

//Sri said...

வழக்கம் போல கவிதை நல்லா இருந்தது.......! :-) //

நன்றி ஹை.

//கல்லூரிக்கு போன பிறகு கூடவா குட்டு வாங்கி படிச்சீங்க....? ;-)//

அம்மா சகோதரி கல்லூரிக்கு போனதுக்கு அப்புறம் பசங்க படிக்கறதே பெரிய விஷயம் இல்லையா? பாவம் அவர் குட்டு வாங்கியாவது படிக்கிறாரேன்னு சந்தோஷப்படும் நாம :)

Sri said...

அம்மா-va ? சகோதரி-ya..?!?

ஸ்ரீ said...

//Sri said...

அம்மா-va ? சகோதரி-ya..?!?//

குட் கொஸ்டின்! :)

இது நாயகன் பாணி டயலாக் மாதிரி இருக்கே! ;)

Naresh Kumar said...

எல்லாக் காதலும் (கவிதையும்) மிக அருமை!!!

மஹாராஜா said...

//‘குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.

romba nalla varigal sri..

//ஆளில்லாத வகுப்பில்
என் பிறந்த நாளுக்கு
நீ முத்தம் தர
வெட்கத்தில்
சிவந்த கரும்பலகைக்கு
இந்நேரம்
வர்ணம் தீட்டியிருப்பார்களா?

=========================

எப்படீங்க ? இப்படி எல்லாம் ?

அண்ணா..புகழான் அண்ணா..
ஸ்ரீ அண்ணன் இப்போ ரொம்ப யோசிக்க ஆரமிசிட்டார்..

ஜி said...

Love is mirage..... :)))

Divya said...

மீண்டும் ஒரு அழகான கவிதை...!!

\\‘குட்டாமல் சொல்லித்தர முடியாதா’
என வாயால் கேட்டாலும்,
நீ குட்டுவாயெனத்தெரிந்த மனம்
பிழைகளை
சரியாகச் செய்கிறது
எப்போதும்.\\

பிழைகளை சரியாக செய்கிற ......குறும்பு ரசிக்கும்படியாக உள்ளது!

Divya said...

\\டேய் தம்பி நீயும் புது வலை தொடங்குறதா போன பதிவுல ....\

உங்களை தம்பி ன்னு சொல்லி ரொம்ப சின்ன பையன் இமேஜ் கொண்டுவரும் எண்ணமோ???

just kidding:))