ஸ்ரீயாகிய நான் 2 ணா அது நான் இல்லீங் ணா

ஸ்ரீயாகிய நான் 1

ம்... இப்போ ஒரு நிலைமைக்கு வந்தாச்சுங்க ஸ்கூல்ல. ஏன்னா வயசுக்கு வந்தவங்க கம்மி அப்போ (அர்த்தம் புரியாதவங்க முதல் பாகம் படிக்கவும்). அடுத்த கட்ட முயற்சியா அழகா முடிவெட்டினேன் 'நம்மவர்' கரண் மாதிரி. எல்லா ஜூனியர் பசங்களும் ஆர்வமா பாப்பானுங்க. எத்தனையோ பேருக்கு நான் ரோல் மாடலா இருந்திருக்கேன். அதனால பீ.இ.டீ வாத்திக்கு என் மேல கொஞ்சம் கான்டு. ஒரு மேச்சு சரியா விளையாடலைனு கத்துனான் நான் "போடா ஹேர்"னு பேட்ட தூக்கி போட்டுட்டு போயிட்டேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா பின்னாடி ஒரு பெரிய ஆப்பு வெச்சுட்டான் அவன்.

எப்பவுமே தீபாவளிக்கு எங்க ஸ்கூல்ல வெடி வெச்சே ஆகணும் அது தான் ரூல் (எல்லா ஸ்கூல்லையும் பண்ணுவாங்கனு நினைக்குறேன்). பூனைக்கு யாரு மணி கட்டுறதுனு கேள்வி. நெஞ்ச நிமித்திகிட்டு சரி நான் பண்றேன் மாப்ளைங்களானு சொல்லிட்டேன். அதுல ஒரு டெக்னிக்குங்க சரவெடி வாங்கிட்டு வந்து திரிய நல்லா கிள்ளி அத ஒரு ஊதுவத்தி நடுவுல கட்டணும் அப்புறம் வத்திய பத்த வெச்சிட்டு அப்பீட்டு ஆயிடணும் (தூ... இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்கானு கேக்காதீங்க, நான் அயின்ஸ்டீன் இல்ல இவ்ளே தான் யோசிக்க முடியும் நம்மலால). இதுக்கு பேரு தான் டைம் பாம் (டைம் சரம்னு கூட சொல்லலாம்). நான் கொஞ்சம் பயபுள்ளங்களோட சேர்ந்து அடுத்த ஆப்பரேசனுக்கு ரெடி ஆனேன். பக்காவா பிளான் போட்டு வெச்சோம். ஆனா எந்த முந்திரிக்கொட்டையோ எனக்கு முன்னாடி அத செய்வானு நினைக்கலை.

தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி. சாமியெல்லாம் கும்பிட்டுட்டு சந்தனம் வெச்சிகிட்டு கிளம்பினேன். என் அம்மா என்னடா புள்ள சாமியெல்லாம் கும்புடாதேனு அப்பவே கேட்டாங்க என்ன தப்பு பண்ண போறியானு. அப்பவாவது நான் உசாரா ஆயிருக்கலாம் ஆனா 'விதி..... வலியது'. காலீல லொகேசன் பாக்க போனேன் (பாத்ரூம் தான் வேற எங்க கொண்டி வெக்க). அங்க நான் "ரெக்வயர்மென்டு கேதரிங்" பண்ணிகிட்டு இருந்தப்ப உச்சா போக ஒரு ஆறாங்கிளாஸ் பையன் வந்தான். "டேய் அண்ணன் கொஞ்சம் வேளையா இருக்கேன் இடத்த காலி பண்ணு"னு சொல்லி தொறத்தி உட்டுட்டேன். பாவம் அந்த பிஞ்சு மனசு என்ன பாடு பட்டிருக்கும்? சே இப்போ நினைச்சா கூட கண்ணு கலங்குது (பீலிங்ஸ்). நான் சும்மா இடம் பாக்க தான் போனேன் நாளைக்கு வந்து வெக்கலாம்னு. ப்ரேயர் நடந்தப்ப பாத்தா என்னோட லொகேசன்ல எவனோ சூட்டிங் பண்ணிட்டான். மானாவாரியா சத்தம். சரம் சூப்பரா வெடிக்குது. ஆனால் பையன் கொஞ்சம் லூசு போல தொட்டி பக்கத்துல கொண்டு போயா வெப்பான் அது எகிறி தொட்டி உள்ள உழுந்திடுச்சு. பாதி தான் வெடிச்சுது ஆனா சோக்கா வெடிச்சுது.

ஒரே எமர்ஜென்சி தான் போங்க. பீ.இ.டீ என்னமோ பெரிய காரியம் நடந்தா மாதிரி ஓடுறான் பாத்ரூமுக்கு. சி.ஐ.டி அந்த மீதி பாதிய போலீஸ் நாய் மாதிரி கவ்விகிட்டு வந்தான். நம்ம பசங்க சும்மாவா இருப்பானுங்க கிளாசுக்கு வந்த உடனே மாம்ஸ் சூப்பர் டானு கை குடுக்குறானுங்க. நான் வெக்கலைனு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க. சரி யாரு வெச்சா என்ன? நமக்கு வேளை மிச்சம்னு போய் சந்தோசமா உக்காந்துகிட்டேன். ஜுவாலஜி லேபுக்கு ஒன்னும் எழுதாம வந்துட்டேன் அன்னிக்கு. அந்த மேடம் கொஞ்சம் சிடு மூஞ்சு 11thல‌ இருந்தே என்னை பிடிக்காது அதுக்கு. சரி ஏன் திட்டு வாங்கணும்னு உக்காந்து கிளாஸ் நடக்கும் போது கீழ நோட்டை வெச்சி கிறுக்கிகிட்டு இருந்தேன். அப்போ நம்ம பீ.இ.டி பரேடுனு கிளாஸ் ரூமுக்கு வந்தான். கூட பாத்தா நம்ம செல்லம், காலைல நான் தொறத்தி விட்ட செல்லம் தான். பாவம் அவன் அந்த நேரம் வரைக்கும் உச்சா போகலைன்னு நினைக்கிறேன் (மூஞ்சிய பாத்தா அப்டி தான் இருந்தது). நான் அப்போவாவது நிமிந்து பாத்திருக்கலாம் ரொம்ப சின்சியரா எழுதிகிட்டு இருந்தேன் (அது தேவை இல்லை அன்னிக்குனு தெரியாம தான் எழுதுனேன் ஏன்னா நான் லேபுக்கு போகலை). பீ.இ.டீ நான் குனிந்து இருக்கறத பாத்து செல்லத்துக்கிட்ட "இவனா? இவனா?"னு கேட்டான். செல்லமும் இவனே தான்னு கரெக்டா தப்பா சொல்லிட்டான்.

அப்புறம் என்ன? தூக்குங்கடா இவனனு ஒரு ஆடரு நம்ம பீ.இ.டீ கிட்ட இருந்து. நேரா பிரின்ஸி ரூம்ல டைட்டில்ல சொன்னா மாதிரி சொல்லிகிட்டு நான் சிட்டிங் (உண்மைய சொல்லனும்னா நீலிங்). அந்த பிரின்ஸி கூட வேற ஒரு விசயத்துல டிஸ்யூம். ஒரு நாள் திங்கக்கிழமை ஓத் (உறுதி மொழி) எடுக்கும் போது பின்னாடி இருக்க பையன் கிட்ட "டேய் நம்ம பிரின்ஸி பாக்க சி.ஐ.டி சகுந்தலா மாதிரி இருக்கா இல்ல"னு சொல்லிட்டேன். அத பாத்துட்டாங்க. அவ்ளோ கும்பல்லவும் கரெக்டா தெரிந்ததுல இருந்தே தெரியலையா நான் கொஞ்சம் கிளாமர்னு :). அதனால அவங்க வந்து என்னமோ சொத்தே போனா மாதிரி கத்துனாங்க. நான் சொன்னத கூட இருந்தவனுங்களே நம்பலை அது நம்புமா?. மானஸ்தன் நான் நேரா போய் அப்பாவோட வந்துட்டேன். அவங்க இந்த பையன போலீஸ்ல புடிச்சு குடுக்கணும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் எப்டியோ நான் புரூவ் பண்ணி கலங்கத்தை தொடச்சிக்கிட்டேன்னு வைங்க. ஆனா இன்னி வரைக்கும் எவன் வெச்சதுன்னே சொல்ல மாட்டேங்குறாங்க. இதுல இருந்து என்ன தெரியுது?

"வெடி வைங்க ஆனா எவன் கிட்டையும் சொல்லாம வையுங்க"

ஸ்ரீயாகிய நான் 3

ஞாபகங்கள் தாலாட்டும்...
-ஸ்ரீ.

10 கால்தடங்கள்:

Anonymous said...

Gud comedy Sri. I loved it n had a good laugh

ஸ்ரீ said...

நன்றி சுவேதா இன்னும் அந்த நாட்களை நினைத்து நான் சிரிப்பதுண்டு.

Anonymous said...

Ultimate comedy Sri. Hope to get more of ur Life time happenings

ஸ்ரீ said...

கண்டிப்பாக தருகிறேன் அருண். ரசித்ததற்கு நன்றி.

ச.பிரேம்குமார் said...

வெடி எல்லாம் நாங்க கல்லூரில தான் வெச்சிருக்கோம். இங்க என்னடான்னா பள்ளியிலேயா?

அப்புறம் வெயிட்டிங் ஃபார் த ரொமான்ஸ் பார்ட் ;)

ஸ்ரீ said...

நண்பரே எல்லோரும் அதுக்கு தான் காத்திருக்காங்க. கொஞ்சம் சென்சார் பண்ணிவிட்டு போடுறேன் ஆனா கண்டிப்பா போடுவேன் பிரதர்.

Tina said...

super comedy po!! write more about ur school life and college life...mothathula un vaalkaye comedy thaan pola:)

ஸ்ரீ said...

வாங்க கிருஸ்டினா,
கண்டிப்பா எழுதுவேன். ஆனா வாழ்க்கையே காமெடினு சொல்லிடீங்களே......

உன் வாழ்க்கை உன் கையில் said...

Hi ஸ்ரீ, Super; Pakka comedy.......... I loved it.....Unga school life and college life pathi innum niraya eluthunka.....

ஸ்ரீ said...

கண்டிப்பா எழுதுகிறேன் நண்பரே! இப்போது கொஞ்சம் வேலை (உண்மையா வேலை செய்யலனாலும் நடிக்கவாவது செய்யணும் இல்ல)அதான் முன்பு போல எழுதமுடிவதில்லை...