காதல் பிழைக்க

எங்கே போகிறது இந்த காதல்?
காதல் போயின் சாதல்
என கொதித்த மூத்த கவியின்
வார்த்தையை பொய்யாக்கும் முயற்சியோ?

கடற்கரை மணலிலும்,
அரங்குகளின் இருட்டிலும்,
பூங்காவின் புதரிலும்,
காதல் கொலை செய்யும் காமுகா!

நடுத்தெருவில் சூரியன் சிரிக்க‌
புணரும் தெருநாய்க்கும்
உனக்கும் பெரிய‌
வித்தியாசம் இல்லை.

காமஇச்சை தீர உனக்கு
காதலென்ன கேடயமா?
அடேய் படைத்தவனே!

ஒன்று
ஆணைக் கருத்தரிக்கவை,
இல்லை
அவளை ஊர் கூட்டி,
அவன் வீட்டின் முன்
பிரசவிக்க ஆணையிடு!

காதல் பிழைத்துக்கொள்ளும்...

காதல் அழிவதில்லை...
- ஸ்ரீ

(உண்மைக் காதலை சாடி எழுதப்படவில்லை)

2 கால்தடங்கள்:

Anonymous said...

காதலும், காமமும் ஒருசாராருக்குச் சொந்தமில்லை, இருபாலாரும் சேர்ந்திழைக்கும் தவறினைக் காதலின் மேலேற்றுவதும், காமத்தைத் தூற்றுவதாலும் பயனேதுமில்லை, இவ்வுலகில் காமுகாவும் உள்ளனர், காமுகியும் உள்ளனர், யாரையும் கடிந்து கொள்வதில் பயனேதுமிலை, "தீதும் நன்றும் பிறர் தர வாரா.."

-மன்னிக்கவும் !

ஸ்ரீ said...

மன்னிப்பு கேட்க தேவையில்லை நண்பா! உங்கள் பெயரிலேயே இதை சொல்லியிருக்கலாம். விமர்சனத்துக்கு நன்றி. நான் காதலின் பெயரால் நடக்கும் காமத்தை தான் சொல்ல வந்தேன். உண்மைக் காதலை விமர்சிக்கும் தகுதி யாருக்குமில்லை என அறிவேன். இருபாலரையும் தான் சாடியிருக்கிறேன் என நினைக்கிறேன் (கடைசி சில வரிகளை மறுபடி படிக்கவும்). காமத்தை காதலின் நிழலில் நடத்த வேண்டாம் என்பதே என் சிறிய வேண்டுகோள்!!

நன்றி